1.7 கிலோ எடையுள்ள குழந்தை, இதய அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் சாதனை..

குழந்தைக்கு இருக்கும் சுவாச பிரச்சனைக்கு இதயத்தில் உள்ள கோளாறு தான் காரணம் என மருத்துவர்கள் கண்டறிந்தனர்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 24, 2020, 06:07 PM IST
  • குழந்தையின் இதயத்தை 60 நிமிடங்கள் நிறுத்தி அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
  • குழந்தையின் உடல் உறுப்புகள் எதுவும் முழுமையாக வளராத நிலையில், இந்த அறுவை சிகிச்சை மிக மிக சிக்கலானதாக இருந்ததாக மருத்துவர்கள் கூறினர்.
  • சுவாச பிரச்சனை காரணமாக நுரையீரலில் திரவம் சேர்திருந்தது.
1.7 கிலோ எடையுள்ள குழந்தை, இதய அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் சாதனை.. title=

கோயம்புத்தூர் மருத்துவர்கள், குறை பிரசவத்தில் பிறந்த மூன்று மாத குழந்தைக்கு மிக சிக்கலான அறுவை சிகிச்சையை செய்து காப்பாற்றியுள்ளனர்.

பிறந்த போது ந்த குழந்தையின் எடை 800 கிராமாக இருந்தது.

அந்த குழந்தைக்கு மூச்சு விடுவதிலும், உணவு எடுத்துக் கொள்வதிலும் சிக்கல் இருந்தது.

அந்த குழந்தையின் தந்தை ஜெகன்னாதனுக்கு மூன்று மாதங்களாக வேலை இல்லை. வீட்டில் ட்ரைவராக வேலை பார்த்து வந்தார். குழந்தையை அவர்கள் கோயம்புத்தூரில் உள்ள ஜிகேஎன்எம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

அங்கே அக்குழந்தைக்கு நடத்திய பரிசோதனையில், இதயத்தில் துளை இருப்பது தெரிய வந்தது.

பிறந்த போது  வெறும் 800 கிராம் எடையில் இருந்த குழந்தை, மூன்று மாதங்களில் வெறும் 1.7 கிலோ எடையில் இருந்தது. 

திருப்பூரில் இருந்த ஒரு மருத்துவர் தான் கோயம்புத்தூரில் உள்ள மருத்துவமனைக்கு கூட்டி செல்லுமாறு பரிந்துரைத்ததாக, குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் டாக்டர் விஜயகுமார் ராஜு தெரிவித்தார்.

குழந்தைக்கு இருக்கும் சுவாச பிரச்சனைக்கு இதயத்தில் உள்ள கோளாறு தான் காரணம் என மருத்துவர்கள் கண்டறிந்தனர்.

முன்னதாக இந்த குழந்தைக்கு சிகிச்சை அளிக்க தனது சேமிப்புகள் அனைத்தையும் செலவு செய்து விட்டதால், அந்த தம்பதியினரிடம் பணம் இல்லை.

பின்னர், மருத்துவர் பலரை தொடர்பு கொண்டு நிதி திரட்ட முயற்சித்தார். அதன் மூலம், ஈரோடு, திருப்பூர் மற்றும் கோயபுத்தூரை சேர்ந்த பலர் தாராளமாக நிதி வழங்கியதில், 1.5 லட்சம் ரூபாய் திரட்டப்பட்டது.

குழந்தையின் உடல் உறுப்புகள் எதுவும் முழுமையாக வளராத நிலையில், இந்த அறுவை சிகிச்சை மிக மிக சிக்கலானதாக இருந்ததாக மருத்துவர்கள் கூறினர்.

ALSO READ | படிப்பு தாங்க முக்கியம்... தடைகளை வென்று அசத்தும் பச்சைமலை பழங்குடி மாணவர்கள்..!!!

“குழந்தையின் இதயத்தை 60 நிமிடங்கள் நிறுத்தி அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அந்த குழந்தையின் இதயம் மற்றும் நுரையீரலுக்கான ஒரு  மெஷினுடன் இணைக்கபட்டது.  

குழந்தையின் மிக மெல்லிய ரத்த குழாய்களின் வழியாக, ரத்த ஓட்டத்திற்காக மூன்று குழாய்கள் சொருகப்பட்டன” என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

சுவாச பிரச்சனை காரணமாக நுரையீரலில் திரவம் சேர்திருந்தது. ஆனால், இதய அறுவை சிகிச்சைக்கு பின்,  நிரையீரலில் தேங்கியிருந்த திரவம் தானாகவே வெளியேறி விட்டது. என மருத்துவர்கள் மேலும் தெரிவித்தனர்.

இரு வாரங்களுக்கு பிறகு குழந்தை நலமாக வீடு சேர்ந்துள்ளது.

ALSO READ | இந்த இயர்பட்ஸ் உங்களுக்கு புதிய மொழியைக் கற்றுக்கொள்ள உதவும்!

Trending News