பொதுவான ஒரு மொழி அவசியம்; ஆனால் இந்தியை திணிக்கக் கூடாது: ரஜினி

பொதுவான ஒரு மொழி இருந்தால்  நாட்டின் வளர்சிக்கும், ஒற்றுமைக்கும் நல்லது. ஆனால் அது இந்தியாவில் நடக்காது என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

Written by - Shiva Murugesan | Last Updated : Sep 18, 2019, 01:21 PM IST
பொதுவான ஒரு மொழி அவசியம்; ஆனால் இந்தியை திணிக்கக் கூடாது: ரஜினி title=

சென்னை: "இந்தி" தான் இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு உகந்த மொழி என உள்துறை அமைச்சர் அமித் ஷா கருத்துக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், திரைத்துறையில் சூப்பர் ஸ்டாராக இருக்கும் ரஜினி காந்த் எந்தவித கருத்தும் கூறாமல் இருந்து வந்தார். ஆனால் இன்று செய்தியாளர்கள் இந்தி திணிப்புக்கு எதிராக ரஜினியிடம் கேள்வி கேட்டனர். அதற்கு அவர், எந்த ஒரு மொழியும் திணிக்கக்கூடாது. தமிழகம் மட்டுமில்லை தென் இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்கள் கூட ஏற்க்காது. அதுமட்டுமில்லை வட இந்தியாவில் கூட பல மாநிலங்களில் இந்தி திணிப்பை ஏற்றுக்கொள்ளாது எனக் கூறினார்.

இன்று சென்னை விமான நிலையத்தில் தமிழக அரசியலில் களம் காண உள்ள ரஜினிகாந்த் அவர்கள் செய்தியாளர்கள் சந்திப்பில் மேலும் கூறுகையில், ஒரே மொழி என்பது நம்ம நாடும் மட்டுமில்லை, எந்தவொரு நாடக இருந்தாலும் பொதுவான ஒரு மொழி இருக்க வேண்டும். அப்படி இருந்தால் நாட்டின் வளர்சிக்கும், ஒற்றுமைக்கும் நல்லது. ஆனால் துரதிஷ்டவசமாக நம்ம நாட்டில் அப்படி கொண்டு வரமுடியாது. அதனால் எந்த மொழியும் திணிக்க முடியாது. அதையும் மீறி திணித்தால் எதிர்ப்பு கிளப்பும் என்றும் கூறினார்.

 

முன்னதாக, செப்டம்பர் 14 ஆம் தேதி இந்தி மொழி நாளாக "இந்தி திவாஸ்" தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அன்று பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, உலகில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தக் கூடியதாக ஒரு மொழி இருப்பது அவசியம். அதிக மக்களால் பரவலாக பேசப்படும் இந்தி தான் இந்தியாவை ஒற்றுமையாக வைத்திருக்கக்கூடிய மொழி என்று கூறினார். மேலும் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்தியா வெவ்வேறு மொழிகளைக் கொண்ட நாடு. ஒவ்வொரு மொழிக்கும் தனிப்பட்ட முக்கியத்துவம் உள்ளது. ஆனால், நமது நாடு முழுவதற்கும் ஒரே மொழி இருப்பதும் அவசியமாகும். அதுவே உலகளவில் இந்தியாவின் அடையாளமாக இருக்கும். இன்று ஒரு மொழியால் நாட்டை ஒற்றுமையாக்க முடியும் என்றால், அது அதிகம் பேசப்படும் இந்தி மொழியால் தான் முடியும் எனப் பதிவிட்டு இருந்தார். இதற்கு நாடு முழுவதும் பல மாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பின. பாஜக ஆளும் மாநிலங்களில் கூட கண்டனம் தெரிவிக்கப்பட்டது. 

Trending News