உடல் உறுப்புக்களை திருடுவதாக புகார்! மருத்துவமனையை முற்றுகையிட்டவர்கள் கைது!

கோவையில் பிம்ஸ் மருத்துவமனையை முற்றுகையிட முயன்ற  இந்திய தேசிய லீக் கட்சியினரை போலிசார் கைதுசெய்தனர்.   

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 12, 2022, 04:53 PM IST
  • தனது தாய்க்கு மருத்துவமனை நிர்வாகம் சரியான சிகிச்சை அளிக்கவில்லை என்று குற்றம் சாட்டிருந்தார்.
  • முற்றுகையிட வந்த இந்திய தேசிய லீக் கட்சியையை சேர்ந்த 8 பேரை போலிசார் கைது செய்தனர்
உடல் உறுப்புக்களை திருடுவதாக புகார்! மருத்துவமனையை முற்றுகையிட்டவர்கள் கைது! title=

கடந்த ஆண்டு கொரானா இரண்டாம் அலையின்போது கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள தனியார் பிம்ஸ்(FIMS) மருத்துவமனையில்  உடுமலை பேட்டையை சேர்ந்த சத்தியபாமா என்ற பெண்ணை கொரானா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். இந்த நிலையில் சத்தியபாமாவின் மகள் பிரவீனா மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்தார், தொடர்ந்து ஆர்ப்பாட்டமும் நடத்தினர்.

ALSO READ | Pongal 2022: முகூர்த்த காலுடன் தொடங்கியதா அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி?

இதில் தனது தாய்க்கு மருத்துவமனை நிர்வாகம் சரியான சிகிச்சை அளிக்கவில்லை என்று குற்றம் சாட்டியதுடன் கொரானா சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட பலருடைய  உடல் உறுப்புகளையும் மருத்துவமனை நிர்வாகம் திருடியதாக அந்த மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள் தெரிவித்திருந்தார்.

inc

இந்த நிலையில் அந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து இந்திய தேசியலீக் கட்சியை சேர்ந்தவர்கள் பிம்ஸ்(FIMS) மருத்துவமனையை முற்றுகையிட போவதாக வந்த தகவைலை அடுத்து மருத்துவமனை முன்பாக ஏரளமான போலிசார் குவிக்கப்பட்டதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.  இந்த நிலையில் முற்றுகையிட வந்த இந்திய தேசிய லீக் கட்சியையை சேர்ந்த 8 பேரை மருத்துவமனை அருகில் வரும் முன்பாகவே தடுத்து நிறுத்தி போலிசார் அவர்களை கைது செய்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

ALSO READ | பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தில் சிறப்பு பேருந்துகள் வசதி!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News