இலங்கை தீர்மானத்துக்கு கண்டனம்: ராமேசுவரத்தில் மீனவர்கள் போராட்டம்!

Last Updated : Jul 9, 2017, 11:20 AM IST
இலங்கை தீர்மானத்துக்கு கண்டனம்: ராமேசுவரத்தில் மீனவர்கள் போராட்டம்! title=

எல்லை தாண்டி வந்ததாக இலங்கை கடற்படை தமிழக படகுகளுக்கு ரூ.20 கோடி வரை அபராதம் விதிக்கும் சட்ட மசோதா இலங்கை பார்லிமென்டில் தாக்கல் செய்யப்பட்டது. 

இந்நிலையில் ராமேசுவரத்தில் நடைபெற்ற அனைத்து மீனவர்கள் சங்க கூட்டத்தில் இலங்கையின் தீர்மானத்திற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

மேலும் இலங்கை சிறையில் தவிக்கும் தமிழக மீனவர்கள் மற்றும் சிறைபிடிக்கப்பட்ட 141 படகுகளை விடுவிக்க வலியுறுத்தியும் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்வது என்றும் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

போராட்டம் குறித்து மீனவர் சங்க தலைவர்கள் கூறுகையில்:-

இலங்கை பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தால் மீனவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. மத்திய அரசின் மெத்தனத்தால் மீன்பிடி தொழில் அழியும் அபாயம் உள்ளது.

1976-ம் ஆண்டு கச்சத்தீவு ஒப்பந்தத்தில் உள்ளபடி பாரம்பரிய மீன்பிடிப்பு பகுதியில் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்கும் உரிமையை மத்திய அரசு பெற்றுத்தர வேண்டும் அல்லது கச்சத்தீவை மீட்டு மீனவர்கள் மீன்பிடிக்க வழிவகை செய்ய வேண்டும் என்றனர்.

Trending News