தமிழகத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 8-ஆக உயர்வு...

தமிழகத்தில் கொரோனா வைரஸால் இறந்தவர்களின் எண்ணிக்கை 8-ஆக அதிகரித்துள்ளது.

Last Updated : Apr 8, 2020, 01:25 PM IST
தமிழகத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 8-ஆக உயர்வு... title=

தமிழகத்தில் கொரோனா வைரஸால் இறந்தவர்களின் எண்ணிக்கை 8-ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வேலூர் கிறிஸ்டியன் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 45 வயது நபர் செவ்வாய்க்கிழமை இறந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம், தமிழகத்தில் கொரோனா வைரஸால் இறந்தவர்களின் எண்ணிக்கை 8-ஆக அதிகரித்துள்ளது.

வேலூர் ஆட்சியர் செவ்வாய்க்கிழமை இரவு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

சுகாதார அதிகாரிகள் மரணத்தை உறுதிப்படுத்திய நிலையில், இரவு 11.30 மணி வரை அதிகாரப்பூர்வ புல்லட்டின் வெளியிடப்படவில்லை. முந்தைய நாள், COVID-19 காரணமாக தமிழகம் மற்றொரு மரணத்தை அறிவித்தது. இந்த அறிவிப்பின் படி 64 வயதான ஒரு பெண்(வெளிநாடு பயண வரலாறு இல்லாத, ஆனால் “அதிக ஆபத்துள்ள பகுதிகளில்” இருந்து வந்தவர்), ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் இறந்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் நேற்றைய தினம் கொரோனாவிற்கு தமிழகத்தில் மேலும் 69 புதிய நேர்மறை வழக்குகள் பதிவாகியுள்ளது. இதில் 63 பேர் கடந்த மாதம் டெல்லியில் நடைபெற்ற தப்லீஹி ஜமாஅத் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் என தெரிகிறது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 690-ஆக அதிகரித்துள்ளது. 

இந்தியாவை பொறுத்தவரையில் மொத்தம் 5300-க்கு மேற்பட்ட உறுதிப்படுத்தப்பட்ட வழக்குகள் பதிவாகியுள்ளது. இதில் அதிகப்படியாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 1018 வழக்குகள் பதிவாகியுள்ளது. இதனைத்தொடர்ந்து இரண்டாம் இடத்தில் தமிழகம் 690 வழக்குகளை பதிவு செய்துள்ளது. இதில் சுமார் 637 வழக்குகள் டெல்லி தப்லீஹா ஜமாஅத் கூட்டத்தில் பங்கேற்றவர்கள் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

Trending News