மக்கள் கவனத்திற்கு! Night Curfew பிறப்பிக்க நேரிடலாம்: எச்சரிக்கும் தமிழக அரசு

தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் நாளை முதல் அமலுக்கு வரும் நிலையில், கொரோனா கட்டுப்பாடுகளுக்கு பலன் கிடைக்கவில்லை என்றால் இரவு நேர ஊரடங்கு விதிக்க நேரிடும் என தமிழ் நாடு அரசு எச்சரித்துள்ளது. 

Written by - Shiva Murugesan | Last Updated : Apr 9, 2021, 04:06 PM IST
மக்கள் கவனத்திற்கு!  Night Curfew பிறப்பிக்க நேரிடலாம்: எச்சரிக்கும் தமிழக அரசு title=

சென்னை: தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் நாளை முதல் அமலுக்கு வரும் நிலையில், கொரோனா கட்டுப்பாடுகளுக்கு பலன் கிடைக்கவில்லை என்றால் இரவு நேர ஊரடங்கு விதிக்க நேரிடும் என தமிழ் நாடு அரசு எச்சரித்துள்ளது. 

நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் அனைத்து மாநிலங்களிலும் இதை கட்டுப்படுத்த பலவித நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்திலும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பல வித கட்டுப்பாடுகளை நேற்று தமிழக அரசு  அறிவித்தது. கொரோனா (COVID-19) கட்டுப்பாடுகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுகப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டு உள்ளது.

தமிழக அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகள் மூலம் கொரோனா பரவல் கட்டுக்குள் வரவில்லை என்றால்,  இரவு நேர ஊரடங்கு மற்றும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்றும் தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் பொதுமக்கள் மிகுந்த கவனமாகவும், எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும். அவசர வேலையாக வெளியே செல்லும் போது முகமூடி அணிய வேண்டும் மற்றும் சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும். 

புதிய கட்டுப்பாடுகள் (Corona Restrictions) ஏப்ரல் 10 (நாளை) முதல் நடைமுறைக்கு வரும். தமிழக அரசு விதித்துள்ள முக்கியக் கட்டுப்பாடுகள் குறித்து தெரிந்துக்கொள்ளுங்கள்.

ALSO READ | சென்னை மக்களே, மாஸ்க் போடாம மாட்டிக்காதீங்க: 200 ரூபாய் அபராதம், முழு பட்டியல் உள்ளே

அனைத்து மத நிகழ்வுகளும், திருவிழா கூட்டங்களும் அடுத்த உத்தரவு வரும் வரை தடைசெய்யப்பட்டுள்ளன. இருப்பினும், வழிபாட்டுத் தலங்கள் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகளும் இரவு 11 மணி வரை திறந்திருக்கும். ஆனால் 50 சதவீத வாடிக்கையாளர் திறனில் மட்டுமே இவற்றை இயக்க முடியும். 

மல்டிபிளக்சில் உள்ள திரையரங்குகள், பொழுதுபோக்கு கிளப்புகள், பொழுதுபோக்கு பூங்காக்கள், விலங்கியல் பூங்காக்கள் மற்றும் அருங்காட்சியகங்களில் 50 சதவீத இருக்கைகளுக்கான மக்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். சமூக, அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு மற்றும் கலாச்சார நிகழ்வுகளில் உட்புற அரங்குகளில் அதிகபட்சமாக 200 பேர் மட்டுமே இருக்க முடியும்.

திருமண விழாக்களில் 100 க்கும் மேற்பட்ட நபர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். இறுதிச் சடங்குகளில் 50 பேருக்கு மட்டுமே அனுமதி உண்டு. பொது போக்குவரத்தின் இயக்கம் வழக்கம் போல் இருக்கும் என்றாலும், அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் பயணிகள் நின்றுகொண்டு பயணிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள். டாக்சிகளில், மூன்று பயணிகள் மட்டுமே பயணிக்க முடியும். ஆட்டோ ரிக்‌ஷாக்களில் இருவர் மட்டுமே பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

ALSO READ | ஓவராக பரவும் கொரோனா, மாவட்டம் தோறும் கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம்- தமிழக அரசு!

மேலும் கொரோனா தொற்றின் எண்ணிக்கையை விரைவாகக் குறைக்க அரசு இந்த கட்டுப்பாடுகளுடன் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. 

அதுமட்டுமில்லாமல் தமிழக அரசு சார்பில், கொரோனாவை (Coronavirus) கட்டுப்படுத்த மாவட்டம் தோறும் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளை கண்காணிக்க 36 மாவட்டங்களுக்கு மூத்த ஐஏஎஸ் (IAS) அதிகாரிகள் நியமிக்கப்படுகின்றனர். இவர்கள் உடனடியாக அந்தந்த மாவட்ட கலெக்டர்களுடன் இணைந்து கொரோனாவை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். தினசரி எத்தனை பேர் இந்த கொரோனா வைரசால் பாதிக்கப்படுகின்றனர், எத்தனை பேருக்கு கொரோனா தடுப்பூசி (Corona Vaccine) போடப்படுகிறது, எத்தனை கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது என்பதை கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

ALSO READ | கொரோனா கட்டுப்பாடுகளை கடுமையாக்கியது தமிழக அரசு: எதற்கு அனுமதி உண்டு? எதற்கு இல்லை?

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News