230 சிறுவர்களுக்கு கொரானா தொற்று பாதிப்பு: வெளியான அதிர்ச்சித் தகவல்

ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா 3-வது அலையில் இதுவரை 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்கள் 230 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 30, 2022, 10:11 AM IST
230 சிறுவர்களுக்கு கொரானா தொற்று பாதிப்பு: வெளியான அதிர்ச்சித் தகவல் title=

உலகம் முழுவதும் பேராபத்தை ஏற்படுத்தி மக்களை அச்சுறுத்தி வாழ்வாதாரத்தை சீர்குலைத்து வரும் கொரோனா தொற்று உருமாறி கொரோனா, டெல்டா வைரஸ், ஒமைக்ரான் என்று பரவி வருகிறது. அந்த வகையில் தற்போது 3-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதன்காரணமாக தமிழகத்தில் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் ஞாயிறு முழு ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு தொற்றின் எண்ணிக்கை குறைய தொடங்கியதும் ஊரடங்கு கட்டுப்பாடு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

தொற்று பரவலை (Corona Spread) கட்டுப்படுத்த தடுப்பூசி போடுவதை தீவிரப்படுத்துவதுடன் முககவசம் அணிதல், கைகழுவுதல், சமூக இடைவெளியை (Social Distance) கடைப்பிடித்தல், தேவையின்றி வெளியில் சுற்றுவதை தவிர்த்தல் போன்றவற்றை பின்பற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ALSO READ | கொரோனாவின் அடுத்த திரிபு ஒமிக்ரானை விட வேகமாக பரவும்: WHO எச்சரிக்கை

மாவட்டத்தில் கடந்த 20 நாட்களுடன் ஒப்பிடும் போது தற்போது தொற்றின் எண்ணிக்கை குறைய தொடங்கி வருகிறது. ஆனாலும், மாவட்டத்தில் 3-வது தொற்று அலை பரவ தொடங்கிய நாள்முதல் பல சிறுவர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. மாவட்டத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 1 ஆம் தேதி முதல் 3-வது அலை பரவிய காலம் முதல் இதுவரை 2 ஆயிரத்து 716 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 230 பேர் 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர், சிறுமிகள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுக்கு தொற்று பரவிய விதம் வீட்டில் பெற்றோர் மற்றும் குடும்பத்தினருக்கு தொற்று ஏற்பட்டு அவர்கள் மூலம் குழந்தைகளுக்கு பரவிய விபரம் சுகாதாரத்துறையினரின் ஆய்வில் தெரியவந்துள்ளது. சிறுவர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டாலும் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

இதேபோல, ராமநாதபுரம் மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்ட 230 சிறுவர்களும் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டதன் அடிப்படையில் தீவிர சிகிச்சை பிரிவிற்கு செல்லாமலேயே குணமடைந்துள்ளனர். இருப்பினும் 230 பேரும் தொடர் தீவிர கண்காணிப்பில் கொண்டுவரப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ALSO READ | Food vs Omicron: ஓமிக்ரானை ஓட ஓட விரட்டும் உணவுகள்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News