சென்னை: கொரோனா வைரஸால் (Coronavirus) பாதிக்கப்பட்ட அரசின் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக புதிய சுகாதார காப்பீட்டு திட்டத்தின் கீழ் தமிழக அரசு (TN Govt) ரூ.2.5 கோடி கார்பஸ் நிதியை (Corpus Fund) ஒதுக்கி உள்ளது.
இத்திட்டத்தின் கீழ் சிகிச்சை எம்பனேல் செய்யப்பட்ட மருத்துவமனைகளில் கிடைக்கும்.
கார்பஸ் நிதியை உருவாக்கும் முடிவு தமிழ்நாடு (Tamil Nadu) மருத்துவ சேவைகள் கழகத்தின் நிர்வாக இயக்குனர் உமநாத்தின் கீழ் அமைக்கப்பட்ட குழுவால் எடுக்கப்பட்டது. கோவிட் -19 (COVID-19) தொற்று ஏற்படும் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கான உச்சவரம்பு விகிதங்களை பரிந்துரைக்க இந்த குழு அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
READ | தற்போதைய மருத்துவக் காப்பீட்டுக் கொள்கை கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு பொருந்துமா?
கருவூல ஆணையர் சி.சமயமூர்த்தி, நிதித்துறை இணைச் செயலாளர் எம்.அர்விந்த், பொது சுகாதார இயக்குநர் டி எஸ் செல்வவணாயகம் ஆகியோர் இக்குழுவில் உறுப்பினர்களாக இருந்தனர்.
இந்த குழுவின் கூட்டம் ஜூன் 16 அன்று கூட்டப்பட்டது. மேலும் காப்பீட்டுத் திட்டத்தின் (Corona Helath Insurance) கீழ் கோவிட் -19 சிகிச்சைக்கான புதிய நிதிதொகுப்புகளைச் சேர்க்க உச்சவரம்பு விகிதங்களை பரிந்துரைத்தது.
கார்பஸ் நிதிக்கு ரூ .2.5 கோடி பங்களிப்பு அளிப்பதன் மூலம் ஓய்வூதியக்காரர்கள் மற்றும் ரிட்டையர்மென்ட் சலுகைகள் கணக்கின் கீழ் பற்று வைக்கப்படும் என்று நிதிச் செயலாளர் எஸ்.கிருஷ்ணன் பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கொரோனா செலவுகளைச் சமாளிக்க தேவையான நிதி வழங்கப்படும்.
READ | 30 ஆம் தேதி வரை கார், பைக் உள்ளிட்ட தனியார் வாகன போக்குவரத்தும் ரத்து: EPS!
புதிய சுகாதார காப்பீட்டு (Health Insurance) திட்டத்தின் காலத்தை 2020 ஜூலை 1 முதல் ஜூன் 30-2021 வரை ஒரு வருட காலத்திற்கு அரசாங்கம் நீட்டித்துள்ளது. காப்பீடு செய்யப்பட்ட அனைத்து ஊழியர்களின் குடும்பங்களுக்கும் நிதி உதவி ரூ.4 லட்சமாகவும், யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்துடன் செய்யப்பட்ட ஒப்பந்தத்தின் நிபந்தனைகளின் படி குறிப்பிட்ட நோய்களுக்கு ரூ .7.5 லட்சமாகவும் வழங்கப்பட்டுள்ளது
.