மதுரை மத்திய சிறையில் சிறைத்துறை டிஜிபி திடீர் ஆய்வு

மதுரை சிறையில் கைதிகள் அடைக்கப்படும் பகுதி, நூலகம், மருத்துவமனை, தொழிலகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சிறைத்துறை டிஜிபி பாா்வையிட்டாா்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Nov 20, 2022, 03:53 PM IST
  • மதுரை மத்திய சிறைச்சாலையில் சிறைத்துறை டிஜிபி அம்ரேஷ் பூஜாரி ஆய்வு செய்தார்.
  • மதுரை சிறையில் கைதிகள் அடைக்கப்படும் பகுதி, நூலகம், மருத்துவமனை, தொழிலகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை பாா்வையிட்டாா்.
  • உணவு தயாரிப்பது மற்றும் கைதிகளால் தயாரிக்கப்படும் பொருட்கள் உள்ளிட்டவற்றை சோதனையிட்டார்.
மதுரை மத்திய சிறையில் சிறைத்துறை டிஜிபி திடீர் ஆய்வு

மதுரை மத்திய சிறையில் சிறைத்துறை டிஜிபி கைதிகளிடம் குறைகளை கேட்டு ஆய்வு செய்தார். தமிழக சிறைத்துறை டிஜிபியாக அம்ரேஷ் பூஜாரி கடந்த 4- ஆம் தேதி பொறுப்பேற்றது முதல் சிறைத்துறையில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறாா். அதன் ஒரு பகுதியாக அவா், தமிழகத்தின் முக்கிய சிறைச்சாலைகளில் திடீா் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

 இந்த நிலையில் மதுரை மத்திய சிறைச்சாலையில் சிறைத்துறை டிஜிபி அம்ரேஷ் பூஜாரி இன்று ஆய்வு செய்தார். மதுரை சிறையில் கைதிகள் அடைக்கப்படும் பகுதி, நூலகம், மருத்துவமனை, தொழிலகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை பாா்வையிட்டாா்.

மேலும் படிக்க | உதயநிதி அப்படிப்பட்ட ஆள் இல்லை - ஆதரவு தெரிவித்த சீமான்! 

தொடர்ந்து கைதிகளுக்கு உணவு தயாா் செய்யப்படும் பகுதிக்கு சென்று, அங்கு சுகாதாரமான முறையில் உணவு தயாரிப்பது மற்றும் கைதிகளால் தயாரிக்கப்படும் பொருட்கள் உள்ளிட்டவற்றை  சோதனையிட்டார். 

சிறை வளாகத்தில் தண்டனைக் கைதிகள் அடைக்கப்பட்டிருக்கும் அறை, விசாரணைக் கைதிகள் அடைக்கப்பட்டிருக்கும் அறை, பெண்கள் தனிச்சிறை ஆகியவற்றையும் ஆய்வு செய்தாா்.

கைதிகளிடம், அவா்களது குறைகளை அம்ரேஷ் பூஜாரி கேட்டறிந்தாா். மேலும், சிறைத்துறை காவலா்கள் குடியிருப்பு பகுதிக்கு சென்று அங்கு வசிக்கும் சிறைக்காவலா் குடும்பத்தினரிடம் குறைகளை கேட்டறிந்தாா்.

முன்னதாக, டிஜிபி அம்ரேஷ் பூஜாரி, புழல் சிறையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அனைவரும் அதிசயிக்கும் வண்ணம் அவர் கைதிகளுடன் அமர்ந்து உணவு அருந்தினார். சமீபத்தில்தான் அம்ரேஷ் பூஜாரி சிறைத்துறை டிஜிபி-யாக பொறுப்பேற்றார்.

பொறுப்பேற்றது முதல், அவர் சிறைத்துறையில் பல குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். புழல் சிறையில் அவர், கைதிகள் அடைக்கப்பட்டிருக்கும் பகுதிகள், மருத்துவமனை, நூலகம் உள்ளிட்ட பல இடங்களை நேரில் சென்று பார்வையிட்டார்.

மேலும் படிக்க | இன்று மாலை முதல் வட தமிழ்நாட்டில் மழை தொடரும்: வானிலை ஆய்வு மையம் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

 

More Stories

Trending News