தேமுதிக பொருளாளரும், விஜயகாந்தின் மனைவியுமான பிரேமலதா விஜயகாந்திற்கு கொரோனா தொற்று இருப்பது கடந்த திங்கட்கிழமை அதாவது செப்டெம்பர் 28ம் தேதி உறுதி செய்யப்பட்டது.
அதை அடுத்து அவர் சென்னை MIOT மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இப்போது அவர் வெள்ளிக்கிழமை டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் மற்றும் கட்சியின் பொருளாளர் பிரேமலதா ஆகியோருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட பின், அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைக்கு நல்ல பலன் உள்ளது என்றும் அவர் நன்றாக உடல தேறி வருகின்றனர் என்று மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ALSO READ | பாவங்களை போக்கும் கங்கை கொரோனாவையும் போக்குமா... நிபுணர் குழு ஆய்வு..!!!
செப்டம்பர் 22 ஆம் தேதி விஜயகாந்த் அவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. செப்டம்பர் 28 ஆம் தேதி பிரேமலதாவுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கும் தொற்று இருப்பது உறுதியானது.
பிரேமலதாவுக்கான முதற்கட்ட சோதனைகள் நடத்தப்பட்டதும் விஜயகாந்த் அவர்களும் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என மருத்துமனை அதிகாரிகள் தெரிவித்தனர்
தமிழ்நாட்டில் ஆளும் அதிமுக தலைமையிலான கூட்டணியின் ஒரு பகுதியாக தேமுதிக கட்சி உள்ளது குறிப்பிடத்தக்கது.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR