இலங்கைப் போரின்போது தமிழர்கள் படுகொலைக்கு மத்தியில் கூட்டணியாக இருந்த தி.மு.க. மற்றும் காங்கிரஸ் தான் காரணம் எனக்கூறி தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.
அந்த கூட்டத்தில் திமுக கட்சியை கடுமையாக தாக்கி பேசினார்கள் அதிமுக தலைவர்கள். மேலும் திமுக மீது பல குற்றசாட்டுகளை வைத்தனர்.
அதற்க்கு பதில் அளித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டிருக்கிறார். அதில்,
"ஊழலில் கொழுத்துக் கொண்டிருக்கும் அதிமுக ஆட்சியாளர்கள் தி.மு.க வுக்கு எதிராக போராட்டம் நடத்தி நகைச்சுவை செய்து கொண்டிருக்கிறார்கள்!
ராஜபக்சேவை அண்மையில் டெல்லிக்கு அழைத்து வந்து பிரதமரைச் சந்திக்க வைத்ததே உங்கள் எஜமானர் கட்சி தானே. அவர்களை எதிர்க்க உங்களுக்கு தைரியம் இருக்கிறதா?
வரலாற்றில் எதிர்க்கட்சியை பார்த்து அஞ்சி நடுங்கி போராட்டம் நடத்தும் ஒரே கட்சி துரோகமும், ஊழலும் கொண்ட அதிமுக மட்டுமே!
இதுவரை ஒரு குற்றத்தை எங்கள் மீது சுமத்தி உங்களால் நிரூபிக்க முடிந்ததா?
இனியும், எங்கள் மீது குற்றம் சுமத்த துணிவிருந்தால் வழக்கு போடுங்கள்!
இவ்வாறு பதிவிட்டுள்ளார்.