கொடிக்கம்பம் விபத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு DMK நிதியுதவி...

கொடிக்கம்பம் விழுந்த விபத்தில் காயமடைந்த அனுராதாவிற்கு திமுக ரூ.5 லட்சம் நிதியுதவி அளித்துள்ளது...

Last Updated : Nov 18, 2019, 10:44 AM IST
கொடிக்கம்பம் விபத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு DMK நிதியுதவி...  title=

கொடிக்கம்பம் விழுந்த விபத்தில் காயமடைந்த அனுராதாவிற்கு திமுக ரூ.5 லட்சம் நிதியுதவி அளித்துள்ளது...

கோவை பீளமேடு அருகே இரு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த சிங்காநல்லூரைச் சேர்ந்த அனுராதா எனும் ராஜேஸ்வரி மீது அதிமுக கட்சி கொடி கம்பம் விழுந்து விபத்துக்குள்ளானதில் தனது காலை அவர் இழந்துள்ளார். இவர் கோவை சின்னியம் பாளையம் பகுதியில் உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் கணக்காளராக பணியாற்றி வருகின்றார்.

கடந்த 11-ஆம் தேதி காலை ஸ்கூட்டரில் இவர் பணிக்கு சென்றபோது, கோவை பீளமேடு கோல்டுவின்ஸ் பகுதியில் சாலை தடுப்பு பகுதியில் அதிமுக கட்சி கொடிக்கம்பங்கள் கட்டப்பட்டு இருந்தன. இதில் ஒரு கொடிக்கம்பம் திடீரென்று சாய்ந்ததாக கூறப்படுகிறது.

இந்த சம்பத்தின் போது நிலைத்தடுமாறிய அவர் ஸ்கூட்டருடன் சறுக்கி கீழே விழுந்துள்ளார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த லாரி ஒன்று ராஜேஸ்வரியின் கால்கள் மீது ஏறியது. இந்த கோர விபத்தில் அவரது இரண்டு கால்களும் லாரி சக்கரத்தில் சிக்கியதால் கால்கள் நசுங்கி படுகாயம் அடைந்துள்ளார்.

ராஜேஸ்வரியின் ஸ்கூட்டர் லாரி சக்கரத்துக்குள் மாட்டிக்கொண்டது. அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த விஜயானந்த் (30) என்பவரும் லாரியில் மோதி காயம் அடைந்தார். கால்கள் முறிந்து படுகாயம் அடைந்த ராஜேஸ்வரிக்கு கோவை நீலாம்பூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் ராஜேஸ்வரியின் இடதுகால் அகற்றப்பட்டதாக மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். விபத்தில் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணுக்கு தலைவர்கள் பலரும் வருத்தம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விபத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

இந்நிகழ்வின் போது திமுக சார்பில அவர் ரூ.5 லட்சத்திற்கான காசோலையையும் அளித்துள்ளார். மேலும் அனுராதாவிற்கு செயற்கை கால் பொறுத்துவதற்கான முழு செலவையும் திமுக ஏற்கும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக மு.க.ஸ்டாலின்  தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது., "அதிமுக கொடிக் கம்பம் சரிந்ததால் விபத்துக்குள்ளாகி, கால்கள் அகற்றப்பட்டுள்ள அனுராதாவுக்கு ஆறுதல் கூறினேன். திமுக சார்பில் நிதியுதவி வழங்கி அவருக்கு செயற்கைக் கால் பொருத்தவும் உதவப்படும் என உறுதியளித்தேன். அதிமுக சார்பில் ஆறுதல் கூட இல்லை, இவ்வளவு அலட்சியமும் ஆணவமும் கூடாது" என பதிவிட்டுள்ளார்.

Trending News