பெற்றோர் ஆசியுடன் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட திமுக தலைவர்!

மறைந்த தலைவர் கருணாநிதியின் துணைவியார் ராசாத்தி அம்மாள் காலில் விழுந்து ஆசி வாங்கி தேர்தல் பிரச்சாரத்தை துவங்கினார் திமுக தலைவர் முக ஸ்டாலின்!

Last Updated : Mar 19, 2019, 08:31 PM IST
பெற்றோர் ஆசியுடன் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட திமுக தலைவர்! title=

மறைந்த தலைவர் கருணாநிதியின் துணைவியார் ராசாத்தி அம்மாள் காலில் விழுந்து ஆசி வாங்கி தேர்தல் பிரச்சாரத்தை துவங்கினார் திமுக தலைவர் முக ஸ்டாலின்!

தமிழகத்தின் 39 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரி பாராளுமன்ற தொகுதிக்கும் அடுத்த மாதம் 18-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. அதே சமயம் தமிழகத்தில் காலியாக இருக்கும் 18 சட்டசபை தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தப்படவுள்ளது.

இத்தேர்தலில் தமிழகத்தில் அதிமுக-பாஜக-பாமக கூட்டணி கட்சிகள் ஓர் அணியாகவும், திமுக-காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் மற்றொரு அணியாகவும் போட்டியிடுகின்றன. அமமுக, நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் கட்சிகள் தனித்து போட்டியிடுகின்றன. முக்கிய கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பணிகளில் ஆர்வமாக ஈடுப்பட்டு வருகின்றன.

இதற்கிடையே, தி.மு.க தனது தேர்தல் அறிக்கையை இன்று அறிவித்தது. அதில், "கேஸ் தொகைக்கு வழங்கப்படும் மானியத் தொகை வங்கிகளில் செலுத்தப்படும் முறை மாற்றம், கல்வி மாநில பட்டியலுக்கு மாற்றம், நீட் தேர்வு ரத்து, மாணவர்களின் கல்விக்கடன் ரத்துசெய்ய நடவடிக்கை, தேசிய நெடுஞ்சாலையைப் பராமரிக்க 10 -ம் வகுப்பு படித்த 1 கோடி பேருக்கு பணி" உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் அதில் இடம்பெற்றுள்ளன. 

இதற்கிடையில் தேர்தல் அறிக்கையை வெளியிடுவதற்கு முன்னதாக முக ஸ்டாலின், கோபாலபுரம் இல்லம் சென்றுள்ளார். அங்கு, மறைந்த தலைவர் கருணாநிதி உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தினார், தேர்தல் அறிக்கையை வைத்து வணங்கிக்கொண்டார்.
 
பின்னர் தனது தாய் தயாளு அம்மாளைச் சந்தித்த ஸ்டாலின், தேர்தல் அறிக்கையை அவரிடம் கொடுத்து காலில் விழுந்து ஆசி பெற்றுள்ளார். இந்தச் சந்திப்பின்போது, ஸ்டாலினின் மனைவி துர்கா, மகன் உதயநிதி உள்ளிட்டோர் உடனிருந்தனர். இதனை முடித்துக்கொண்டு கனிமொழியின் தாயார் ராசாத்தி அம்மாள் இல்லத்துக்குச் சென்ற ஸ்டாலின், அவரின் காலில் விழுந்து ஆசி பெற்றுள்ளார். இந்த சந்திப்பின்போது, ஆ.ராசா, டி.ஆர்.பாலு, கனிமொழி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Trending News