சனாதனம் குறித்து தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், இது குறித்து தி.மு.கவின் கொள்கை பரப்பு செயலாளர் ஆ.ராசா பேசியுள்ளார்.
“விஷப்பாம்பை கொல்ல திராவிடம் என்னும் மருந்துதான் என்பதை வடநாட்டில் உள்ளவர்களும் புரிந்து கொள்கின்றனர் அதனால்தான் சனாதான தர்மம் என்றால் என்னவென்று அவர்களுக்கு தெரியவில்லை சனாதானம் என்றால் மலேரியா டெங்கு எனச் சொன்னார்கள் நான் சனாதானம் என்பது ஒரு எச்ஐவி என்பேன்” என ஆ.இராசா உதகையில் காரசாரமாக பேசியுள்ளார்.
நீலகிரி மாவட்டத்தில் உதகை குன்னூர் கூடலூர் தொகுதிகளின் வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் உதகையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.இராசா சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் ஆ. இராசா பேசும் போது சனாதானம் குறித்து மத்தியில் ஆளும் அரசுக்கு என்ன தெரியும் இது பெரியார் மண் என காரசாரமாக பேசினார். “மோடி ஒரு விஷப்பாம்பு எனவும். பாம்பு கடித்தால் மருந்து இல்லை. அதற்கான மருந்து திராவிடம் ஏனென்றால் இது பெரியார் மண” எனக் கூறினார்.
மேலும் படிக்க | 9 ஆண்டு கால ஆட்சியின் தோல்விகளை மறைக்க பாஜக பொய்யைப் பரப்புகிறது - உதயநிதி ஸ்டாலின்
“சனாதானம் என்பது ஒரு எச்ஐவி”
தன்னைப் பொறுத்தவரை சனாதானம் என்பது ஒரு எச்ஐவி என கூறினார் இது மட்டுமல்லாமல் சனாதானம் குறித்து உதயநிதி பேசியதற்கு பெருமையாக உள்ளதென கூறிய ஆ.இராசா உதயநிதி இளைஞர் அணி செயலாளராக இருந்த போதும் தற்போது அமைச்சராக இருந்த போதும் இல்லாத பெருமை அவர் சனாதானத்தை பற்றி பேசும்போது பெருமையாக இருக்கிறது எனவும் இத்தத்துவத்தை நூறாண்டு காலத்துக்கு தூக்கி நிறுத்த ஒரு தம்பி வந்து விட்டார் என்றார்.
தந்தை பெரியார் நமக்கு கொள்கையை வளர்த்துக் கொடுத்த பிதாமகன் பெரியார் இந்த மண்ணில் இருந்த பொழுது மதவாதம் இல்லை இந்தியாவில் கூட இந்த ஆபத்து இல்லை ஆகவே பெரியார் அண்ணா கலைஞர் இருக்கும் போது இல்லாதிருந்த இந்த மதவாத ஆபத்து இன்று எதிர்கொள்ள துணிச்சலாக திராவிடம் உள்ளதென கூறினார்.
மேலும் பேசிய அவர், “CAG அறிக்கையில் அதானி FROUD என சொல்கிறது அப்படியானால் மோடியும் FROUD தான் மறுத்துச் சொல்லாமல் மௌனம் காத்தால் நான் குற்றம் சாட்டுகிறேன் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் மோடியும் FROUD என நாடாளுமன்றத்தில் சொன்னவன் நான் இதைப் பற்றி டுவிட்டர் பக்கத்தில் பெங்களூரில் இருப்பவர் ஒருவர் கருத்து தெரிவித்த போது அவர் கைது செய்தனர் ஆனால் தாம்பரத்திலும் நாடாளுமன்றத்தில் இதை நான் பேசினேன் twitter பக்கத்தில் கருத்து கூறியவரை கைது செய்தது போல் தன்னையும் கைது செய்யுங்கள்” என ஆ. இராசா கூறினார்.
மேலும் படிக்க | சென்னையில் திருப்பதி சாமியாரின் மஹாசத்சங்கம்! டிரம்ஸ் சிவமணி பங்கேற்பு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ