ப்ளஸ் 2 மதிப்பெண்கள் சமீபத்தில் வெளியாகின. இதனையடுத்து மாணவர்கள், மாணவிகள் அடுத்ததாக உயர்கல்வியில் என்ன படிக்கலாம் என்பது குறித்த ஆலோசனையையும், வழிகாட்டுதலையும் வழங்க அரசு சார்பில் கல்லூரி கனவு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
அந்தவகையில் திண்டுக்கல்லில் நேற்று கல்லூரி கனவு நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர் அர.சக்ரபாணி, வேலுச்சாமி எம்பி, வேடசந்தூர் எம்.எல்.ஏ. காந்திராஜன் மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் பேசிய காந்திராஜன், “மல்டிநேஷனல் கம்பெனிகளில் வேலைவாய்ப்பு கொடுப்பது எப்படியென்றால், நீங்கள் வாங்கியிருக்கும் மதிப்பெண்களை பெரும்பாலும் பார்ப்பதில்லை. உங்களின் கல்வித்தகுதி, எந்த துறையில் ஆர்வம், என்ன செய்திருக்கிறீர்கள் என்பதை பார்த்தாலும், பிரதானமாக உங்களிடம் எதிர்பார்ப்பது ஆங்கில புலமையைத்தான்.
மேலும் படிக்க | சின்னவர் என்று அழைக்க சொல்லவில்லை; இருக்கும் பிரச்னை போதாதா - உதயநிதி ஸ்டாலின்
உங்களிடத்தில் ஆங்கில புலமை இருக்கிறதா? ஆங்கிலத்தில் சரளமாக பேசும் அறிவு இருக்கிறதா? என்பதைத்தான் முதலில் பார்க்கிறார்கள்.
சரளமாக ஆங்கிலத்தில் பேசும் திறமை இருந்தால்தான் அதிகமான சம்பளம் கிடைக்கும், மல்டிநேசனல் கம்பெனியில் வேலை கிடைக்கும். பெண்களாக இருந்தால் அழகாக இருக்கவேண்டும் என்று கம்பெனிகாரர்கள் நினைக்கிறார்கள். அவர்களுக்கு கூடுதல் சம்பளம் கொடுக்கிறார்கள்” என்றார்.
அவரது இந்தப் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் அவருக்கு பலரும் தங்களது கண்டனத்தை தெரிவித்துவருகின்றனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR