சின்னவர் என்று அழைக்க சொல்லவில்லை; இருக்கும் பிரச்னை போதாதா - உதயநிதி ஸ்டாலின்

சின்னவர் என்று யாரையும் அழைக்க சொல்லவில்லையென உதயநிதி ஸ்டாலின் கூறியிருக்கிறார்.

Written by - க. விக்ரம் | Last Updated : Jul 3, 2022, 10:13 AM IST
  • உதயநிதி ஸ்டாலினின் காலில் தஞ்சை மேயர் விழுந்தார்
  • தன்னை சின்னவர் என்று அழைக்கலாம் என உதயநிதி கூறியிருந்தார்
சின்னவர் என்று அழைக்க சொல்லவில்லை; இருக்கும் பிரச்னை போதாதா - உதயநிதி ஸ்டாலின்  title=

சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அந்த சுற்றுப்பயணத்தில் ஒரு பகுதியாக புதுக்கோட்டையில் பேசிய உதயநிதி, “என்னை யாரும் மூன்றாம் கலைஞர் என்று அழைக்க வேண்டாம். உங்கள் அனுபவத்திலும், வயதிலும் நான் சின்னவன். எனவே என்னை சின்னவர் என்று அழைக்கலாம்” என்று கூறியிருந்தார்.

இது இப்படி இருக்க தஞ்சை சென்ற உதயநிதி ஸ்டாலினின் காலில் மேயர் சண். ராமநாதன் விழுந்தார். இதுகுறித்து அவரிடம் கேட்கப்பட்டபோது உதயநிதி கடவுள் என்பதால் காலில் விழுந்தேன் என விளக்கமளித்தார். 

மேலும் படிக்க | உதயநிதி கடவுள் என்பதால் காலில் விழுந்தேன் - தஞ்சை மேயர் எக்ஸ்க்ளூசிவ் பேட்டி

இதனையடுத்து சின்னவர் என்று உதயநிதி தன்னை அழைக்க சொல்வது, உதயநிதியின் காலில் மேயர் விழும் காட்சிகள் என்று உதயநிதியை சுற்று நடக்கும் விஷயங்களில் அதிமுக வாடை அடிப்பதாக பலர் வெளிப்படையாகவே கருத்து தெரிவித்தனர். இந்நிலையில் சின்னவர் யாரையும் அழைக்க சொல்லவில்லையென உதயநிதி தற்போது கூறியிருக்கிறார்.

Udhayanidhi Stalin

ஆதம்பாக்கத்தில் கலைஞரின் 99ஆவது பிறந்தநாளையொட்டி 1600 திமுக மூத்த முன்னோடிகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் பொற்கிழி வழங்கும் நிகழ்வு நடந்தது. இதற்கு அமைச்சர் த.மோ. அன்பரசன் தலைமை தாங்கினார். 

அந்த நிகழ்ச்சியில் உதயநிதி இதுதொடர்பாக பேசுகையில், “நான் யாரையும் சின்னவர் என்று அழைக்க சொல்லவில்லை. இருக்கிற பிரச்னைகள் போதாதா.

மேலும் படிக்க | அதிமுக பொதுக்குழுவை மு.க.ஸ்டாலின் தடுத்து நிறுத்த வேண்டும் - மதுரையில் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு

என் மீதுள்ள அன்பின் காரணமாக மூன்றாம் கலைஞர் என என்னை அழைக்கின்றனர். என்னை பெருமைப்படுத்துவதாக நினைத்து கலைஞரை சிறுமைப்படுத்துகின்றனர்.

கலைஞருக்கு நிகர் கலைஞர் மட்டுமே. ஒரே கலைஞர்தான். உங்கள் வயது, அனுபவம் ஆகியவற்றுக்கு நான் சின்னவன். யாரையும் நான் அப்படி கூப்பிட சொல்லவில்லை. இங்கு யாரும் யாருக்கும் அடிமையாக இருக்க வேண்டாம். அனைவரின் அன்புக்கு நான் அடிமை” என்றார்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News