தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் திமுக மூத்த தலைவர் துரைமுருகன் சர்ச்சை பேச்சு

நீங்கள் எங்களுக்கு வாக்களிக்க வில்லை என்றால் இந்த வாணியம்பாடிக்கு சலுகை கிடையாது. ஐந்து வருடத்திற்கு ஓரங்கட்டி விடுவோம் -துரைமுருகன் 

Written by - Shiva Murugesan | Last Updated : Feb 17, 2022, 12:17 PM IST
தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் திமுக மூத்த தலைவர் துரைமுருகன் சர்ச்சை பேச்சு title=

சென்னை: திமுகவுக்கு வாக்களிக்காவிட்டால் 5 ஆண்டுகளுக்கு வாணியம்பாடி புறக்கணிக்கப்படும் என தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் துரைமுருகன் பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரத்தின்போது வாணியம்பாடி தொகுதி மக்களை அச்சுறுத்தும் வகையில் பேசியிருப்பதாக திமுக கட்சியின் பொதுச்செயலாளரும் மூத்த அமைச்சருமான துரைமுருகன் மீது குற்றசாற்று எழுந்துள்ளது.

திமுக மூத்த தலைவர் துரைமுருகன் எப்பொழுதும் கலகலப்பாக பேசக்கூடியவர். பொதவாக அவர் நக்கலும் நையாண்டியுமாக பேசுபவர். செய்தியாளர்கள் மத்தியில் பேசும் போதுக்கூட சீரியஸான மேட்டர் ஆக இருந்தாலும், அதை தனக்கான பாணியில் பேசி அனைவரையும் சிரிக்க வைப்பார்.  சில நேரங்களில் அவரின் பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பி விடுவதும் உண்டு. சில நேரங்களில் அவரின் பேச்சு தனது கூட்டணி கட்சி தலைவர்களையும் கோபப்பட வைக்கும் அளவுக்கு இருக்கும். 

தற்போது தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. இன்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடையுள்ளது. அனைத்து கட்சி தலைவர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வரிசையில், திருப்பத்தூர் மாவட்டத்தில் திமுக கூட்டணி கட்சி சார்பில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். 

மேலும் படிக்க: நகர்புற உள்ளாட்சித் தேர்தல் - வெற்றி வாய்ப்பு யாருக்கு? - அலசல்

தேர்தல் பிரசாரத்தின் போது கலகலப்பாக பேசி வரும் திமுக மூத்த தலைவர் துறை முருகன், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் திமுக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்பொழுது அவர் வாணியம்பாடியில் பரப்புரையில் பேசிய போது, "மக்களை பார்த்து நீங்கள் எங்களுக்கு வாக்களிக்க வில்லை என்றால் இந்த வாணியம்பாடிக்கு எந்த சலுகையும் செய்யப்படாது. ஐந்து வருடத்திற்கு ஓரங்கட்டி விடுவோம்"  என்று பேசியுள்ளார். இது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் விவரம்: 

வேட்புமனு தாக்கல் ஜனவரி 28 அன்று தொடங்கியது.
வேட்புமனு தாக்கல் கடைசி நாள் - பிப்ரவரி 04 
வேட்புமனு பரிசீலனை  - பிப்ரவரி 05 
வேட்புமனுக்களை திரும்பப் பெறும் நாள் - பிப்ரவரி 07
தேர்தல் வாக்குப்பதிவு - பிப்ரவரி  19
வாக்கு எண்ணிக்கை - பிப்ரவரி  22

மேலும் படிக்க: விமர்சனங்களை எதிர்கொள்ள நான் எப்போதும் தயங்கியதில்லை -முதல்வர் ஸ்டாலின்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News