தமிழகத்தில் DMK வெற்றி கருத்து கணிப்பு அல்ல; கருத்து திணிப்பு: EPS

தமிழகத்தில் அதிமுக குறைந்த இடங்களையே பிடிக்கும் என்று வெளியான கணிப்பு கருத்து கணிப்பு அல்ல; கருத்து திணிப்பு என எடப்பாடி கருத்து!! 

Updated: May 20, 2019, 12:46 PM IST
தமிழகத்தில் DMK வெற்றி கருத்து கணிப்பு அல்ல; கருத்து திணிப்பு: EPS

தமிழகத்தில் அதிமுக குறைந்த இடங்களையே பிடிக்கும் என்று வெளியான கணிப்பு கருத்து கணிப்பு அல்ல; கருத்து திணிப்பு என எடப்பாடி கருத்து!! 

தமிழகத்தில் மொத்தமுள்ள 39 மக்களவை தொகுதிகளில் வேலூர் மக்களவை தொகுதிக்கு தேர்தல் ரத்து செய்யப்பட்டதை அடுத்து 38 மக்களவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 18-ஆம் நாள் நடைப்பெற்றது. தேர்தல் நடந்து முடிந்த 38 தொகுதிகளில் பாஜக-ஆதிமுக கூட்டணிக்கு 6 தொகுதிகள் வரை கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும், திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு 31 தொகுதிகள் வரை கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும் கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.

நாடு முழுவதும் பாஜக-வின் கை ஓங்கி இருந்தாலும் தமிழகத்தில் பாஜக-வின் கை இன்னும் ஓங்கவில்லை என்பதை இந்த தேர்தலுக்கு பிந்திய கருத்துகணிப்புகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், சேலம் விமான நிலையத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். தமிழகம், புதுவையில் அதிமுக கூட்டணி 39 மக்களவை தொகுதிகளிலும் வெற்றிபெறும் என்றும், சட்டமன்ற இடைத்தேர்தலில் 22 தொகுதிகளிலும் அதிமுக வெற்றிபெறும் என்றும் அவர் கூறினார். ஆனால் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் மாறுபட்ட முடிவுகளை வெளிப்படுத்தியிருப்பது பற்றி செய்தியாளர்கள் கேட்டபோது, அவை கருத்து திணிப்புகள் என முதலமைச்சர் பதிலளித்தார்.

தேர்தலுக்குப் பிந்தைய கருத்து கணிப்புகள் தேசிய அளவில் பாஜக கூட்டணிக்கு சாதகமாக இருப்பது பற்றி செய்தியாளர்கள் கேட்டபோது, தமிழகத்தைப் பற்றி மட்டுமே தான் கூறுவதாக அவர் விளக்கமளித்தார். புதிய சாலைகள் அமைப்பது, சாலை விரிவாக்கம் உள்ளிட்ட  பணிகள், மக்களின் நன்மைக்காக செய்யப்படுவதாக எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்தார். விபத்துகளை தவிர்ப்பது, எரிபொருளை மிச்சப்படுத்துவது மற்றும் வளர்ச்சியை மையப்படுத்தியே சாலை மேம்பாட்டு பணிகள் செயல்படுத்தப்படுவதாக அவர் கூறினார்.

போதிய மழை இல்லாததால் பல பகுதிகளில் வறட்சி ஏற்பட்டுள்ளதாகவும், அதைச் சமாளிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.