திமுகவின் இரட்டை வேடம் அம்பலமாகிவிட்டது என ஜெயக்குமார் விமர்சனம்!

உள்ளாட்சி தேர்தல் விவகாரத்தில் குற்றத்தை எங்கள் மீது சுமத்த மு.க.ஸ்டாலின் முயற்சிக்கிறார் என அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்!!

Updated: Dec 3, 2019, 06:37 AM IST
திமுகவின் இரட்டை வேடம் அம்பலமாகிவிட்டது என ஜெயக்குமார் விமர்சனம்!

உள்ளாட்சி தேர்தல் விவகாரத்தில் குற்றத்தை எங்கள் மீது சுமத்த மு.க.ஸ்டாலின் முயற்சிக்கிறார் என அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்!!

ஊராக உள்ளாட்சி அமைப்பு பதவிகளான, ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சித் தலைவர், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் ஆகிய பதவிகளுக்கு, வருகிற 6ஆம் தேதி வேட்பு மனுத் தாக்கல் தொடங்கிறது. வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்ய இம்மாதம் 13ஆம் தேதி கடைசி நாளாகும். வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை 16 ஆம் தேதியும், அவற்றை திரும்ப பெறுவதற்கான இறுதி நாள் 18ஆம் தேதி என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஊராக உள்ளாட்சி அமைப்புகளுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு, வருகிற 27ஆம் தேதியும், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு வருகிற 30 ஆம் தேதியும் நடைபெறுகிறது.

வாக்கு எண்ணிக்கை ஜனவரி மாதம் 2 ஆம் தேதி நடைபெறும் என்றும், ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் பத விகளுக்கு தெரிவானவர்கள் 6 ஆம் தேதி பதவியேற்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஊராட்சித் தலைவர், ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர், மாவட்ட ஊராட்சித் துணைத் தலைவர், ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர், கிராம ஊராட்சி துணைத் தலைவர் ஆகியோர், ஜனவரி 11ஆம் தேதி நடைபெறும் மறைமுக தேர்தல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

இதையடுத்து, மாநிலத் தேர்தல் ஆணையர் பழனிசாமியா? இல்லை எடப்பாடி பழனிசாமியா என்ற சந்தேகம் உள்ளது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்தார். இந்நிலையில், உள்ளாட்சி தேர்தல் விவகாரத்தில் குற்றத்தை எங்கள் மீது சுமத்த மு.க.ஸ்டாலின் முயற்சிக்கிறார் என அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி கொடுத்துள்ளார். 

இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்; உள்ளாட்சி தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும் எதிர்கொள்ள அதிமுக தயாராக இருக்கிறது. உள்ளாட்சி தேர்தல் விவகாரத்தில் குற்றத்தை எங்கள் மீது சுமத்த மு.க.ஸ்டாலின் முயற்சிக்கிறார். உள்ளாட்சி தேர்தலில் இடஒதுக்கீடு கோரி 2016ல் நீதிமன்றத்தில் வழக்கு போட்டது திமுக தான். மக்களுக்கு தொண்டாற்ற வேண்டும் என தேர்தல் அறிவித்தால், திமுகவிற்கு தேர்தல் ஜுரம்  வந்துவிட்டது. உள்ளாட்சி தேர்தல் விவகாரத்தில் திமுகவின் இரட்டை வேடம் அம்பலமாகி உள்ளது என கூறினார்.