சென்னை: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனின் சமீபத்திய உடல்நிலை குறித்து, அவர் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனை மருத்துவ அறிக்கையை வெளியிட்டுள்ளது.
துரைமுருகனின் உடல்நிலை தற்போது சீராக உள்ளதாகவும், கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை என்றும் மருத்துவமனை அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும், மருத்துவர்களின் குழு அவரை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ALSO READ: திமுக பொதுச்செயலாளர் துரை முருகன் வீட்டில் கொள்ளை முயற்சி: தொண்டர்கள் அதிர்ச்சி
முன்னதாக, ஏப்ரல் 8 ஆம் தேதி, திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு (Durai Murugan) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அவர் தன்னை வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டார்.
அதற்கு முன்னர், திமுக தலைவர் கனிமொழிக்கு (Kanimozhi) கொரோனா தொற்று ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் கனிமொழி ஈடுபட்டு இருந்த நிலையில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
காட்பாடி சட்டமன்றத் தொகுதி வேட்பாளரான துரைமுருகன், சட்டமன்றத் தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டிருந்த நிலையில், தேர்தல் பரப்புரை பணிகள் முடிந்தவுடன் கொரோனா பரிசோதனை செய்துகொண்ட நிலையில், அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
மேலும் துரைமுருகனின் மகனும், வேலூர் எம்.பியுமான கதிர் ஆனந்திற்கும் கொரோனா தொற்று (Coronavirus) உறுதி ஆகியுள்ளதால், அவரும் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
துரைமுருகனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில், அவருக்கு சொந்தமான ஒரு பண்ணை வீட்டில் கொள்ளை முயற்சி ஏற்பட்டதாகவும் செய்திகள் வந்துள்ளன. இதையடுத்து காவல் துறையினர் இது குறித்த விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
ALSO READ: திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு கொரோனா தொற்று உறுதி
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR