திமுக பொதுச்செயலாளர் துரை முருகன் வீட்டில் கொள்ளை முயற்சி: தொண்டர்கள் அதிர்ச்சி

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வீட்டில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது என்ற செய்தி வந்ததிலிருந்து தொண்டர்களுக்கு இடையே அதிர்ச்சியும் ஆச்சரியமும் ஏற்பட்டுள்ளது. 

Written by - ZEE Bureau | Last Updated : Apr 12, 2021, 05:03 PM IST
  • திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வீட்டில் கொள்ளை முயற்சி.
  • துரைமுருகன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தலில் உள்ளார்.
  • அவரது மகனுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திமுக பொதுச்செயலாளர் துரை முருகன் வீட்டில் கொள்ளை முயற்சி: தொண்டர்கள் அதிர்ச்சி

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வீட்டில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது என்ற செய்தி வந்ததிலிருந்து தொண்டர்களுக்கு இடையே அதிர்ச்சியும் ஆச்சரியமும் ஏற்பட்டுள்ளது. 

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் (Durai Murugan) கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சட்டமன்றத் தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டிருந்த துரைமுருகன், தேர்தல் பரப்புரை பணிகள் முடிந்தவுடன் கொரோனா பரிசோதனை செய்துகொண்ட நிலையில், அவருக்கு தொற்று  இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர் தற்போது கிசிக்கையில் உள்ளார், சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள வீட்டில் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். 

மேலும் துரைமுருகனின் மகனும், வேலூர் எம்.பியுமான கதிர் ஆனந்திற்கும் கொரோனா தொற்று (Coronavirus) உறுதி ஆகியுள்ளதால், அவரும் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.  

ALSO READ: திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு கொரோனா தொற்று உறுதி

இந்த நிலையில்,  வேலூர் மாவட்டத்தில், ஏலகிரி மலையில் உள்ள திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் பண்ணை வீட்டில் கொள்ளை முயற்சி நடந்துள்ளதாக வெளிவந்த தகவல்களால் பரபரப்பான சூழல் உள்ளது. 

துரைமுருகனின் பண்ணை வீட்டில் சிலர் கதவை உடைத்து கொள்ளையடிக்க முயன்றதாகத் தகவ்லகள் வந்துள்ளன. இந்த செயலில் ஈடுபட்டவர்கள் யார் என்பது குறித்து காவல் துறை விசாரணை நடத்தி வருகிறது. 

ALSO READ: சென்னையில் கொரோனா பரவல் 10 மடங்கு அதிகரிப்பு: மாநகராட்சி ஆணையர்

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News