சென்னை: தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று காலை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
கடந்த சில மாதங்களாக தேர்தல் வேலைகளில் மிகவும் பரபரப்பாக செயல்பட்டுக் கொண்டிருந்த முதலமைச்சர், இன்று காலை சென்னையில் உள்ள தனியார் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார்.
முதலமைச்சர் பழனிச்சாமிக்கு அறுவைசிகிச்சை செய்ய ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்ததாக தெரியவந்துள்ளது. அவருக்கு, குடலிறக்க அறுவைசிகிச்சை செய்ய வேண்டியிருந்தது. அறுவை சிகிச்சைக்கு முன்னதாக முதலமைச்சருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என்பது தெரியவந்துள்ளது.
Also Read | இந்த வாரம் 5.2 மில்லியன் பேருக்கு Corona பாதிப்பு – WHO
தேர்தல் பிரசாரத்தில் அவர் மும்முரமாக இருந்ததால் அவருக்கு செய்யவேண்டியிருந்த குடலிறக்க அறுவைசிகிச்சை தள்ளிப்போடப்பட்டிருந்தது. குடலிறக்கம் அல்லது ஹெர்னியா என்பது ஒரு உறுப்பு அல்லது திசுவினால் உருவாக்கப்படும் ஒரு வீக்கம் ஆகும்.
பொதுவான குடலிறக்கம் அடிவயிற்றில் தான் ஏற்படுகின்றது. அடி வயிற்று சுவரில் ஏற்படும் பலவீனத்தால் கொழுப்பு திசு அல்லது அடி வயிற்று உறுப்புகள் வெளியே வருவதால் ஹெர்னியா ஏற்படுகிறது.
அவ்வாறு வெளியே வந்த உறுப்பை உறுப்பின் திசுக்களை இயல்பான இடத்தில் மீண்டும் வைத்து அவை வெளியே வராமல் பாதுகாப்பாக வைக்கும் அறுவை சிகிச்சை ஹெர்னியா என்று அழைக்கப்படுகிறது.
Also Read | LICயில் வேலை பார்ப்பவரா? அடித்தது ஜாக்பாட்!
நீண்ட நாள் மலச்சிக்கல் பிரச்சனை கொண்டிருப்பவர்கள் வயிற்றுக்கு அதிக அழுத்தம் கொடுத்து மலம் கழிப்பதாலும் வரலாம். மேலும், அதிக கனமான எடை கொண்ட பொருள்களை தூக்குவதாலும், ஒயாமல் கடுமையான உடல் உழைப்பை கொண்டவர்களுக்கும் ஹெர்னியா ஏற்படலாம்.
இந்தக் காரணங்களைத் தவிர தொடர் இருமல், ஊட்டச்சத்து குறைவு, குடல் செயல்பாடு, வயிற்று தசை வழுவிழத்தல் போன்றவற்றாலும் ஹெர்னியா உண்டாகலாம்.
Also Read | IPL 2021, MI vs SRH: மும்பை இந்தியன் அணி, ஹைதராபாத் அணியை வெற்றி கண்டது
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR