Covid-19 Updates 2021 April 18: அக்டோபஸாக 1000 கரங்களை நீட்டும் கொரோனா

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,61,500 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 1,501 இறப்புகள் பதிவாகியுள்ளன. 1,38,423 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர்.  

Written by - Malathi Tamilselvan | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Apr 18, 2021, 08:57 PM IST
  • கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம்
  • 2,61,500 பேருக்கு கொரோனா பாதிப்பு
  • 1,501 இறப்புகள் பதிவாகியுள்ளன
Covid-19 Updates 2021 April 18: அக்டோபஸாக 1000 கரங்களை நீட்டும் கொரோனா  title=

புதுடெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,61,500 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 1,501 இறப்புகள் பதிவாகியுள்ளன. 1,38,423 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர்.  

மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ள விவரங்களின்படி, இந்தியாவில் கொரோனா (Coronavirus) பாதிப்பின் மொத்த எண்ணிக்கை1,47,88,109 ஆக அதிகரித்துள்ளது.  18,01,316 பேர் சிகிச்சை எடுத்துவரும் நிலையில், இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,28,09,643 என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுவரை கொரோனாவுக்கு 1,77,150 பேர் பலியாகிவிட்டதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வரும் கொரோனா கடந்த 2 நாட்களில் தொடர்ந்து 2,50,000-க்கும் அதிகமானோரை பாதிப்புக்கு உள்ளாக்கி வருகிறது.

Also Read | தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு, ஏப்ரல் 20 முதல் Night Curfew

அதாவது உலகில் மிக மோசமான பாதிப்புக்குள்ளான அமெரிக்காவின் தினசரி பாதிப்பு எண்ணிக்கையை விட இந்தியாவின் தினசரி பாதிப்பு மூன்று மடங்கு அதிகமாகிவிட்டது.  

இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் தமிழகம் 4-வது இடத்தில் உள்ளது. தமிழகத்தின் பல நகரங்களிலும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. இதனால் ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு மற்றும் ஏப்ரல் 20 முதல் தினசரி இரவு ஊரடங்கும் (NIght Curfew) அமல்படுத்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
 
கொரோனாவின் துரித அதிகரிப்பால் மருத்துவமனைகள் நெரிசலால் சிக்கித் திணறிவரும் நிலையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
எனவே, டெல்லியில் உள்ள பள்ளிகள், காமன்வெல்த் விளையாட்டு கிராமம் போன்றவற்றை கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளதாக மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

 Also Read | சென்னையில் உணவகங்களில் இனி பார்சலுக்கு மட்டுமே அனுமதி

மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாரதிய ஜனதா கட்சியே உத்தரப்பிரதேசத்திலும் ஆளும் கட்சியாக இருக்கிறது. மத்திய அமைச்சர் வி.கே.சிங் கொரோனா படுக்கை வசதிகள் தொடர்பாக ட்விட்டரில் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளது நாட்டின் கொரோனா நிலைமையின் நிலைமையை அப்பட்டமாக்கியுள்ளது.

காசியாபாத்தில் வசிக்கும் தனது சகோதரருக்கு கொரோனா சிகிச்சை அளிக்க படுக்கை கிடைக்கவில்லை என்றும், ஒரே ஒரு படுக்கையாவது கொரோனா சிகிச்சை பெறும் தனது சகோதரருக்கு ஏற்பாடு செய்துக் கொடுங்கள் என்று   மத்திய அமைச்சர் வி.கே.சிங் வேண்டுகோள் விடுத்துள்ளது நிலைமையின் தீவிரத்தை அப்பட்டமாக வெளிக்காட்டுகிறது.  

 வட இந்திய மாநிலங்களில் அடிப்படை மருத்துவ கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் மிக மோசமான பாதிப்புக்குள்ளாகி இருப்பதாக நிபுணர்கள் கருதுகின்றனர். வட இந்திய மாநிலங்களில் கொரோனா உயிரிழப்புகள், வெளியில் சொல்லப்படுவதைவிட அதிகமாக இருக்கும் என்பதால் நீதிமன்றங்களே தலையிட்டு வருவதையும் பார்க்க முடிகிறது.  

கொரோனா பாதிப்பு தொடர்பான விவரங்களை மறைக்காமல் உண்மையான நிலவரத்தை பகிரங்கப்படுத்த வேண்டும் என்று குஜராத் மாநில அரசுக்கு, அந்த மாநிலத்தின் உயர்நீதிமன்றம் கடுமையான உத்தரவு பிறப்பித்துள்ளதை உதாரணமாகச் சொல்லலாம்.  

Also Read | சென்னையில் உணவகங்களில் இனி பார்சலுக்கு மட்டுமே அனுமதி

பீகாரில் லாக்டவுன் போன்ற கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை இரவு ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வருகிறது. பீகாரில்; பள்ளிகள், கல்லூரிகள் என அனைத்தும் மே 15 வரை மூடப்படுகிறது.
 
ஜார்க்கண்ட் மாநிலத்தில் லாக்டவுன்இல்லை, என்றும் COVID-19 பாதிப்பு அதிகரித்து வருவதால் புதிய கட்டுப்பாடுகளை விதிப்பதாகவும் முதல்வர் ஹேமந்த் சோரன் அறிவித்துள்ளார்.  

மகாராஷ்டிராவிலிருந்து வரும் பயணிகளின் ஆர்டி-பி.சி.ஆர் அறிக்கைகளை சரிபார்க்கத் தவறியதற்காக நான்கு விமான நிறுவனங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  இண்டிகோ, விஸ்தாரா, ஸ்பைஸ் ஜெட், ஏர் ஏசியா என 4 விமான நிறுவனங்கள் பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் வழக்குகளை எதிர்கொள்கின்றன.  

Also Read | புதுச்சேரியில் கொரோனா மருந்து தட்டுபாடு ஏதும் இல்லை: டாக்டர். தமிழிசை சவுந்தரராஜன்

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News