மதுக்கடைகளை மூடாதீர்கள் - களத்தில் குதித்த மதுப்பிரியர்கள்

ஈரோடு கருங்கல்பாளையத்தில் மதுக்கடையை அகற்றக்கூடாது என மதுப்பிரியர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Written by - க. விக்ரம் | Last Updated : Jun 27, 2022, 01:44 PM IST
  • மதுக்கடைகளை அகற்ற மதுப்பிரியர்கள் எதிர்ப்பு
  • இன்று கலெக்டரிடம் அவர்கள் மனு அளித்தனர்
மதுக்கடைகளை மூடாதீர்கள் - களத்தில் குதித்த மதுப்பிரியர்கள் title=

மது நாட்டுக்கு வீட்டுக்கு உயிருக்கு கேடு என்று பாட்டிலில் எழுதி விற்கப்பட்டாலும் மது மீதான பிரியம் பலருக்கு போவதில்லை. அதேசமயம், அளவுக்கு மீறிய மதுக்கடைகள் பொது இடங்களில் இருக்கின்றன. இதனால் மது அருந்தாதவர்கள், சிறுவர்கள், பெண்கள் என பலரும் அவதிக்குள்ளாகின்றனர்.

இதன் காரணமாக பொது இடத்தில் இருக்கும் மதுக்கடைகளை அகற்ற வேண்டும் என பெண்கள் தொடர்ந்து போராடுகிறார்கள். ஆனால் ஈரோட்டில் இருக்கும் மதுக்கடையை அகற்றக்கூடாது என மதுப்பிரியர்கள் களத்தில் குதித்திருக்கின்றனர்.

மேலும் படிக்க | இபிஎஸ் Vs ஓபிஎஸ்... எங்களைப் போன்ற பிள்ளைகளுக்கு தடுமாற்றம் - உருகும் சீமான்

ஈரோடு கருங்கல்பாளையம் திருநகர் காலனி ஜெயகோபால் வீதியில் மதுக்கடை ஒன்று செயல்பட்டுவருகிறது. இங்கு மதுக்கடை இருப்பது பாதுகாப்பில்லாதது எனவே அதனை உடனடியாக அகற்ற வேண்டுமென்ற கோரிக்கை நீண்ட நாள்களாக இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மதுக்கடைகளை அகற்றக்கூடாது என மதுப்பிரியர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் அளித்த மனுவில், “நாங்கள் பல வருடங்களாக ஜெயகோபால் வீதியில் வசித்துவருகிறோம். இங்கு மதுக்கடை ஒன்று செயல்பட்டுவருகிறது. இங்கு ஆயிரம் குடும்பங்கள் வசிக்கிறோம். 

மேலும் படிக்க | அதிமுகவில் உச்சக்கட்ட பரபரப்பு - கிழிக்கப்பட்ட ஓபிஎஸ் போஸ்டர்... தற்காலிக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி?

நாங்கள் பெரும்பாலும் கூலி தொழிலாளிகள்தான். நாங்கள் இங்கு உள்ள மதுக்கடையில்தான் மது அருந்துகிறோம். எங்களால் இதுவரை எந்த ஒரு பிரச்னையும் இந்த பகுதியில் ஏற்பட்டதில்லை. 

ஆனால் ஒரு சிலர் இந்த மதுக்கடையை அகற்ற முயற்சி செய்து வருகிறார்கள். அவ்வாறு இங்கு இருக்கும் மதுக்கடையை அகற்றினால் நாங்கள் மது குடிக்க பல கிலோ மீட்டர் பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும். இதனால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.

இதனால் எங்கள் நிலையை கருத்தில் கொண்டு தொடர்ந்து இங்கேயே மதுக்கடை இயங்க அனுமதி அளிக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் படிக்க | யுபிஎஸ் வெளிச்சத்தில் பெண்ணுக்கு பிரசவம் பார்த்த அவலம் !

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News