டிஜிட்டல் நீரிழிவு புரட்சி: அடுத்த தலைமுறைக்காக செயற்கை செயல்தளத்த அறிமுகம் செய்த டாக்டர் மோகன்ஸ்

Digital Diabetes Revolution: அடுத்த தலைமுறை நீரிழிவு சிகிச்சைக்காக செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட செயல்தளத்தை அறிமுகம் செய்யும் டாக்டர் மோகன்ஸ்

Written by - Shiva Murugesan | Last Updated : Oct 7, 2022, 03:44 PM IST
  • நீரிழிவு சிகிச்சை தயாரிப்புகள் மற்றும் தகவலை மக்கள் அணுகிப்பெற உதவ ‘DIA’ AI (செயற்கை நுண்ணறிவு) திறன்கொண்ட சேட்பாட்.
  • நீரிழிவு மேலாண்மையில் நோயாளிகளுக்கு உதவ ‘DiaLA’, 24x7 தனிப்பயனாக்கப்பட்ட மெய்நிகர் உதவியாளர் செயலி.
  • ‘DiaNA’, மருத்துவர்களுக்கான துல்லிய மருத்துவ கருவி.
டிஜிட்டல் நீரிழிவு புரட்சி: அடுத்த தலைமுறைக்காக செயற்கை செயல்தளத்த அறிமுகம் செய்த டாக்டர் மோகன்ஸ் title=

Diabetes Specialities Centre: நீரிழிவு சிகிச்சை மையங்களில் மிகப்பெரிய சங்கிலித்தொடர் நிறுவனமான டாக்டர் மோகன்ஸ் நீரிழிவு சிறப்பு சிகிச்சை மையம், "3D முனைப்பு திட்டத்துடன் கூடிய டாக்டர் மோகன்ஸ் டிஜிட்டல் நீரிழிவு புரட்சி (Dr. Mohan’s Digital Diabetes Revolution)" என்ற பெயரில் டிஜிட்டல் புத்தாக்க திட்டத்தை தொடங்கியிருக்கிறது. அதன் டிஜிட்டல் உருமாற்ற நடவடிக்கையின்கீழ் செயற்கை நுண்ணறிவால் செயல்படுத்தப்படும் திட்டமாக இது இருக்கிறது.

இந்த மூன்று டிஜிட்டல் செயல்பாடுகள் கீழ்கண்டவற்றைக் கொண்டிருக்கும்: 

1. ‘DIA’, தானியியக்க செயல்பாடாக டிஜிட்டல் உரையாடல்களின் வழியாக மக்களுக்கு உதவ AI உதவியுடன் இயங்கும் சேட்பாட், 

2. ‘DIALA’ – நோயாளிகளுக்கு நட்புறவான, எளிமையான மொபைல் செயலி, 

3. ‘DIANA’ – துல்லியமான நீரிழிவு சிகிச்சைக்கான உடல்நல பராமரிப்பு செயலி. 

2022 அக்டோபர் 5 அன்று சென்னை மாநகரில் டாக்டர். மோகன்ஸ் நீரிழிவு சிறப்பு மையத்தின் தலைவர் மற்றும் முதன்மை நீரிழிவியல் நிபுணர் டாக்டர். V. மோகன் மற்றும் அதன் நிர்வாக இயக்குநர் டாக்டர். R.M. அஞ்சனா ஆகியோர் இச்செயல்திட்டத்தை தொடங்கி வைத்தனர். நீரிழிவுநிலையிலுள்ள நபர்களுக்கு எளிதான, அதிகளவு தனிப்பயனாக்கப்பட்ட 24x7 ஆன்லைன் சிகிச்சை மற்றும் ஆதரவு சேவைகளை இந்த டிஜிட்டல் உருமாற்ற செயல்திட்டம் ஏதுவாக்குகிறது. வாட்ஸ்ஆப், கூகுள் பிசினஸ் மெசேஜ், ஃபேஸ்புக் மெசெஞ்சர் மற்றும் வலைதள செயல்தளங்கள் ஆகியவற்றில் ஒருங்கிணைக்கப்பட்ட அணுகுமுறை வழியாக நோயாளிகளோடு தொடர்புகொள்வதற்கு AI (செயற்கை நுண்ணறிவு)-ஆல் செயல்படும் மெய்நிகர் உதவியாளரான உலகின் முன்னணி அடுத்த தலைமுறை டோட்டல் எக்ஸ்பீரியன்ஸ் (TX) ஆட்டோமேஷன் தளத்தால் இது இயங்குகிறது.

கலந்துரையாடலுக்கான AI மெய்நிகர் உதவியாளரான ‘DIA’, அதன் தனித்துவமான உரையாடலுக்குரிய AI தொழில்நுட்பம் மற்றும் உள்ளுணர்வு திறன்கொண்ட இன்டர்ஃபேஸ் மூலம் ஆங்கிலத்தில் கலந்துரையாடும் நீரிழிவு நோயாளிகளுக்கு விரிவான தீர்வுகளை வழங்கும் ‘DIA’, மிக விரைவான நேரத்திற்குள் பதிலளிக்கும் மற்றும் நுட்பமான கலந்துரையாடல்களை மேற்கொள்ளும் என்பதால் நோயாளிகளுக்கு இது ஒரு சிறந்த தீர்வாக இருக்கும். மருத்துவரோடு சந்திப்புக்கான முன்பதிவுகளை செய்வது, வருகைகள் மற்றும் பரிசோதனைகளுக்கான நினைவூட்டல்கள் மற்றும் தொலைபேசி மூலம் மருத்துவருடன் கலந்தாலோசனை, கிடைக்கக்கூடிய மருந்துகள், சிகிச்சைகள் மற்றும் வசதிகள் பற்றி விசாரணைகளை மேற்கொள்ளுதல் ஆகியவை DIA-யின் பயன்பாடுகள் தொகுப்பில் உள்ளடங்கும். 

ஒரு அவசரநிலை உடல்நல நெருக்கடி அல்லது பெருந்தொற்று சூழ்நிலையின்போது, நோயாளிகளது உடல்நிலையின் தீவிரத்தின் அடிப்படையில் முறையான நடவடிக்கை எடுக்க மருத்துவர்களையும் மற்றும் நோயாளிகளையும் இது இணைக்கிறது. மேலும் அறிவிக்கைகளை பகிர்ந்துகொள்ளும் இது, நோயாளிகளுக்கு நிகழ்நிலைத் தகவல்களையும், சிறப்பு சலுகை திட்டங்களைப்பற்றிய செய்திகளையும் வழங்குகிறது. இதற்கும் கூடுதலாக, வாட்ஸ்ஆப் அல்லது எஸ்எம்எஸ் அறிவிப்புகளின் மூலம் மருந்துகளை வாங்குவது குறித்து நினைவூட்டல்கள் வழியாக நோயாளிகளுக்கு DIA உதவும். மருந்துகளை வாங்குவதற்கும் மற்றும் அவர்களது ஆர்டர்களின் நிலைபற்றி அறிந்துகொள்ளவும் DIA வகை செய்யும். Yellow.ai என்பது DIA-க்கான எமது செயல்தள சேவை வழங்குனர் நிறுவனமாகும்.

‘DIALA’ என்பது டயாபெட்டிஸ் லைஃப்ஸ்டைல் அசிஸ்டென்ட் மொபைல் அப்ளிகேஷன் என்பதன் சுருக்கமாகும். இந்த செயலி மூலம் டாக்டர் மோகன்’ஸ்-ன் ஒருங்கிணைக்கப்பட்ட நீரிழிவு சிகிச்சை அணுகுமுறை பற்றிய அனைத்து தகவல்களையும் ஒருவர் எளிதாகவும், முழுமையாகவும் பெறமுடியும். உடல் எடை கண்காணிப்பு, நடைபயிற்சி தூரத்தின் அளவு, உணவு திட்டத்தில் மாற்றம், தீரப்போகும் மருந்துகளை மீண்டும் வாங்குவது, செய்திருக்கும் பரிசோதனை அறிக்கை முடிவுகளைப் பெறுவது, குளுகோஸ் கண்காணிப்பு மீதான தரவு, மருத்துவருடன் சந்திப்புகளுக்கான முன்பதிவை செய்வது, நீரிழிவு தொடர்பான பொருட்களுக்கான ஷாப்பிங், நினைவூட்டல்கள் மற்றும் இன்னும் இதுபோன்ற பல பயனுள்ள விஷயங்களின் மூலம் நோயாளிகளுக்கு உயர்தரமான, ஆக்கபூர்வமான பலன்களை வழங்க இச்செயலி உதவும். உடல்நலத்தை கண்காணிக்கவும், நீரிழிவை திறம்பட நிர்வகிக்கவும் இது நோயாளிகளுக்கு உதவும். ஆன்ராய்டு-ல் தற்போது கிடைக்கக்கூடிய இச்செயலி, வெகுவிரைவில் ஐஓஎஸ்-லும் வழங்கப்படும்.

ஒரு நவீன மெஷின் லேர்னிங் கருவியான DIANA (டயாபெட்டிஸ் நாவல் சப்குரூப் அசெஸ்மென்ட்), இன்சுலின் பற்றாக்குறை அல்லது இன்சுலின் எதிர்ப்புத்திறன் படிவங்கள் போன்ற குறிப்பிட்ட துணை குழுக்களுக்குள் புதிதாக கண்டறியப்பட்ட வகை 2 நீரிழிவு குழுக்களுக்குள் வகைப்படுத்த பயன்படுத்தப்படுகிறது. கண் அல்லது சிறுநீரக நோய் போன்ற நீரிழிவால் விளையும் சிக்கல்கள் உருவாவதற்கான இடர்வாய்ப்புகளுக்கான மதிப்பீடுகளையும் இக்கருவி வழங்குகிறது.

பிரசுரிக்கப்பட்டுள்ள நிஜ உலக மருத்துவ தரவின் அடிப்படையில் இந்த மெஷின் லேர்னிங் அணுகுமுறை உருவாக்கப்பட்டுள்ளது; நீரிழிவு நிலையிலுள்ள நபர்களுக்கு தனித்துவமான சிகிச்சை பராமரிப்பை மருத்துவர் வழங்க இது உதவும்.

டாக்டர். மோகன்ஸ் நீரிழிவு சிறப்பு மையத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர். R.M. அஞ்சனா இது தொடர்பாக மேலும் கூறியதாவது: “ஒவ்வொரு குடும்பத்திலும் ஸ்மார்ட்ஃபோன் பயன்பாடு மற்றும் சிரமமில்லாத எளிமையான டேட்டா இணைப்பு வசதி அதிகரித்து வருகின்ற நிலையில் சிகிச்சை பராமரிப்பு என்பது, மருத்துவருடன் நேரடியான ஆலோசனை/சிகிச்சை என்பதனையும் கடந்ததாக மாறியிருக்கிறது. ஆழமான கற்றலுடன் அதிக அளவிலான டிஜிட்டல் உடல்நல சிகிச்சை பராமரிப்பு தரவு, தகவலை வழங்கவும் மற்றும் எமது நோயாளிகளுக்கு உதவவும் தொழில்நுட்ப பயன்பாட்டை ஏதுவாக்குவதற்கு பாட்ஸ்களை (BOTS) செயல்படுத்துவதற்கு வழி வகுத்திருக்கிறது.

வாட்ஸ்ஆப், கூகுள் பிசினஸ் மெசேஜ், ஃபேஸ்புக் மெசெஞ்சர் மற்றும் பிற வலைதள செயல்தளங்கள் போன்ற பல்வேறு தளங்களில் கலந்துரையாடல்களை ஏதுவாக்குவது நோயாளிகள் திறனதிகாரம் பெறுவதற்கு வழிவகுக்கிறது. வீட்டிலிருந்து இரத்தமாதிரி சேகரிப்பு ஒற்றை கிளிக் வழியாக மருத்துவருடனான சந்திப்புக்கு முன்பதிவு செய்வது போன்ற அனைத்து அத்தியாவசிய சேவைகளையும் வழங்குவதன் மூலம் நோயாளிகளின் அனுபவத்தை மேம்படுத்த மற்றும் எளிதாக்க நாங்கள் விரும்புகிறோம்.நேரடியாக மருத்துவ மையத்திற்கு வர இயலாத நபர்கள் பாட் (BOT) வழியாக தொலைபேசியின் மூலம் மருத்துவருடன் கலந்தாலோசிப்பதற்கு முன்பதிவை செய்ய இயலும்.”

டாக்டர். மோகன்ஸ் நீரிழிவு சிறப்பு மையத்தின் தலைவர் மற்றும் முதன்மை நீரிழிவியல் நிபுணர் டாக்டர். V. மோகன், “பெருந்தொற்று காலத்தின்போது எமது நோயாளிகளின் தேவைகளை பூர்த்திசெய்வதிலும், நிர்வகிப்பதிலும் நாங்கள் சிரமங்களை எதிர்கொண்டோம். நோயாளிகளது தொலைபேசிகள் மற்றும் கணினிகள் என எதிலிருந்தும், எந்த நேரத்திலிருந்தும் வரக்கூடிய விசாரணைகளுக்கு பதிலளித்து திருப்தியை உறுதிசெய்வது எமது கடமையாகும். செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் இயக்கப்படும் இந்த புத்தாக்க வழிமுறைகளின் மூலம் 24 மணிநேரமும், எந்தவொரு நபருக்கும் மருத்துவ நிபுணரது சிறப்பான ஆலோசனை கிடைக்கப்பெறும் வசதியை நாங்கள் வழங்குகிறோம். 

தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் இந்த அடுத்த தலைமுறை செயல்தளங்கள், நீரிழிவு சிகிச்சை பற்றி நிகழ்நேரத் தீர்வுகளை வழங்கும்; நமது மக்கள் பயனடைவதற்காக நீரிழிவு குறித்த கட்டுக்கதைகளையும், ஊகங்களையும் அவர்கள் மனதிலிருந்து நீக்க உதவும். தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு மற்றும் அதிரடி மாற்றத்தின் வழியாக உரிய நேரத்திற்குள் மருத்துவ உதவியை வழங்க வேண்டும் என்ற குறிக்கோளைக் கொண்டிருக்கும் நாங்கள், நீரிழிவு சிகிச்சையில் தற்போது நிலவுகிற இடைவெளிகளை இந்த தொழில்நுட்ப புத்தாக்க நடவடிக்கைகள் நிரப்பும் என்று நாங்கள் நம்புகிறோம். முன்கணிப்புடனும் மற்றும் தன்முனைப்புடனும் கூடிய சிகிச்சையை ஏதுவாக்க நீண்டகால அடிப்படையில் உடல்நல தரவினை மருத்துவர்கள் நுண்ணறிவுடன் கண்காணிக்கவும் மற்றும் இதன் மூலம் நோயாளிகளுக்கு உதவவும் ஒரு முழுமையான உடல்நல சிகிச்சை அனுபவத்தை வழங்குவதே எமது நோக்கமாக இருக்கிறது,” என்று குறிப்பிட்டார்.

டாக்டர். மோகன்ஸ் நீரிழிவு சிறப்பு சிகிச்சை மையம் குறித்து:

தமிழ்நாட்டின் சென்னையில் தலைமையகத்தைக் கொண்டிருக்கும் டாக்டர். மோகன்’ஸ் நீரிழிவு சிறப்பு சிகிச்சை மையமானது, 1991-ம் ஆண்டில் நிறுவப்பட்டதாகும். இந்தியாவின் முன்னணி நீரிழிவு சிகிச்சை வழங்கல் நிறுவனமாகத் திகழும் இது, நீரிழிவு நோயாளிகளுக்கு விரிவான சேவைகளை வழங்கிவருகிறது. இந்தியாவில் 50 நீரிழிவு சிகிச்சை மையங்களைக் கொண்டு நீரிழிவு சிகிச்சையில் முழுமையான சேவைகளை இது வழங்கிவருகிறது. இந்த சிகிச்சை மையங்களில் எட்டு இலட்சத்திற்கும் அதிகமான நீரிழிவு நோயாளிகள் இம்மையங்களில் சிகிச்சைக்காக பதிவு செய்யப்பட்டிருக்கின்றனர் மற்றும் இதுநாள்வரை 5.5 மில்லியனுக்கும் அதிகமான மருத்துவ சிகிச்சைக்கான கலந்தாலோசனைகள் செய்து முடிக்கப்பட்டிருக்கின்றன.

சென்னை கோபாலபுரத்தில் உள்ள சிகிச்சை மையம் இதன் முதன்மை மருத்துவமனையாக செயல்படுகிறது. இம்மையம், முழுமையான நீரிழிவு பராமரிப்பு, நீரிழிவில் கண்களுக்கான சிகிச்சை, நீரிழிவில் பாத பராமரிப்பு சேவைகள் நீரிழிவு சார்ந்த இதய சிகிச்சை, நீரிழிவு சார்ந்த வாய் / பற்களுக்கான சிகிச்சை, முன்தடுப்பு பராமரிப்பு, உணவுமுறை ஆலோசனை மற்றும் துல்லிய நீரிழிவு சிகிச்சை ஆகியவற்றில் சிறப்பு கவனமும், நிபுணத்துவமும் கொண்டிருக்கிறது. மேற்குறிப்பிடப்பட்ட அனைத்து டிஜிட்டல் புத்தாக்க செயல்பாடுகளும் டாக்டர். மோகன்ஸ் நீரிழிவு சிகிச்சை மையத்தின் அனைத்து கிளைகளிலும் கிடைக்கும். 8939110000 என்ற எண்ணை அழைப்பதன் மூலம் அல்லது visit: www.drmohans.com என்ற வலைதளத்திற்கு விஜயம் செய்வதன் மூலம் மருத்துவ ஆலோசனைக்கான சந்திப்புகளை முன்பதிவு செய்யலாம்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News