சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மீது திராவிடர் விடுதலை கழகத்தை சேர்ந்த உறுப்பினர்கள் புகார் அளித்துள்ளனர். பெரியாருக்கு எதிராக அவதூறான கருத்துக்கள் கூறப்பட்டதாக ரஜினிகாந்த் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அந்த புகாரின் அடிப்படையில் நடிகர் ரஜினிகாந்த் மீது ஐபிசி பிரிவு 153 ஏ (வெவ்வேறு குழுக்களிடையே பகைமையை ஊக்குவித்தல்) மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் 505 பிரிவு (பொது அமைதி குலைக்கும் அறிக்கைகள்) ஆகியவற்றின் கீழ் "தவறான தகவல்களை பரப்பியதற்காக" காவல்துறை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டுள்ளது.
திரைத்துறை புகழ் மூலம் அரசியலுக்குள் நுழையும் ரஜினிகாந்த், தமிழகத்தின் முக்கிய எதிர்க்கட்சியான திமுகவை குறிவைத்து அவ்வப்போது பேசி வருகிறார் என்பதை உங்களுக்கு சொல்கிறோம்.
"துக்ளக்" பத்திரிக்கையின் பொன்விழா ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துக்கொண்டு பேசிய ரஜினிகாந்த், "மு.கருணாநிதி மற்றும் திராவிட இயக்கத்தின் தலைவர் தந்தை பெரியார் இ.வி.ராமசாமி குறித்து கருத்து தெரிவித்தார்.
அதாவது ரஜினிகாந்த் பேசுகையில், அப்போது 1971-ம் ஆண்டு சேலத்தில் தந்தை பெரியார் நடத்திய மாநாட்டில், ராமர்- சீதை படங்கள் ஆடையில்லாமல் எடுத்து வரப்பட்டு செருப்பால் அடிக்கப்பட்டது. ஆனால் அதை யாரும் வெளியிடாத போது, துக்ளக் பத்திரிகை மட்டுமே தைரியமாக வெளியிட்டது என ரஜினிகாந்த் கூறினார்.
இந்த விவகாரம் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. பலர் நடிகர் ரஜினிகாந்த் கூறிய தகவல் தவறானது என்றும், உண்மை தெரியாமல் பேசி வருகிறார் என சமூக ஊடகங்களில் ரஜினிக்கு எதிராக கருத்துக்கள் வைக்கப்பட்டு வருகிறது.
இதனையடுத்து ரஜினிகாந்தின் பேச்சு அமைதியை குலைக்கும் விதமாக இருப்பதாகக் கூறி திராவிடர் விடுதலை கழகத்தினர் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும் மற்றும் திருச்செங்கோடு நகர போலீஸ் நிலையத்திலும் புகார் அளித்துள்ளார்.
உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.