கொலை மிரட்டல் விடுக்கும் பிள்ளைகள் - பிச்சை எடுக்கும் வயதான தம்பதி

சேலம் அருகே சொத்தை எழுதி வாங்கிக் கொண்ட பிள்ளைகள், அடைக்கலம் கொடுக்காமல் அடித்து துரத்துவதாக வயதான தம்பதியினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளனர்.  

Written by - S.Karthikeyan | Last Updated : Dec 2, 2021, 01:55 PM IST
கொலை மிரட்டல் விடுக்கும் பிள்ளைகள் - பிச்சை எடுக்கும் வயதான தம்பதி title=

’பெத்த மனம் பித்து ... பிள்ளை மனம் கல்லு’ என்ற பழமொழி உண்டு. கடினமாக உழைத்து, பிள்ளைகளை கரைசேர்த்துவிட்டு, நிம்மதியாக இருக்கலாம் என நினைக்கும் பெற்றோர்களை, பிள்ளைகள் சுமையாக நினைக்கும் நிகழ்வுகள் அதிகரித்து வருகிறது. பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியோர்கள், முதியோர் இல்லங்களிலும், தெருக்களிலும் அடைக்கலம் புகுகின்றனர். சாப்பாட்டுக்கு பணம் இல்லை என்பதால், சிலர் பிச்சை எடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுகின்றனர். அப்படியான ஒரு இக்கட்டான நிலைமை சேலத்தைச் சேர்ந்த வயதான தம்பதியினருக்கும் ஏற்பட்டுள்ளது.

ALSO READ | விசாரணை அறிக்கை தர 25 ஆயிரம் லஞ்சம் - பெண் இளநிலை உதவியாளர் கைது.

வாழப்பாடியை அடுத்த காரிப்பட்டி காட்டுவளவு பகுதியைச் சேர்ந்தவர்கள் வெள்ளையன் - பெருமாயி அம்மாள் தம்பதி. வெள்ளையனுக்கு 95 வயதும், பெருமாயி அம்மாளுக்கு 85 வயதும் ஆகிறது. இவர்களுக்கு 2 பிள்ளைகள், ஒரு மகன். மகன் இறந்துவிட்ட நிலையில் இரண்டு பிள்ளைகளும், மகன் வழிப் பேரனும் இணைந்து வயதான தம்பதியிடம் இருந்து 5 ஏக்கர் நிலத்தை எழுதி வாங்கிக் கொண்டுள்ளனர். ஆனால், அவர்களுக்கு உணவு கொடுக்காமல், தங்குவதற்கு அடைக்கலமும் கொடுக்கமால் வீட்டைவிட்டு துரத்தியுள்ளனர். 

ALSO READ | ARREST: தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் உதவியாளர் கைது

இதனால், தெருவில் தஞ்சம் புகுந்துள்ள அவர்கள், உணவுக்கு பிச்சை எடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இது குறித்து காரிப்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு சென்று புகார் கொடுத்துள்ளனர். அதில், தங்களிடம் இருந்து பிள்ளைகள் எழுதி வாங்கிய 5 ஏக்கர் நிலத்தை திருப்பிக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள வயதான தம்பதி, ஆபாச வார்த்தைகளால் திட்டி அவமதித்த பிள்ளைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டுள்ளனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR\

Trending News