ஆம்புலென்ஸிற்கு வழி விடாமல் நிறுத்திய நபரால் பரிதாபமாக உயிரிழந்த முதியவர்!

ராசிபுரம் அருகே அவசர ஊர்தி வாகனத்திற்கு வழி விடாமல் நிறுத்திய நபரால் பரிதாபமாக முதியவர் உயிரிழந்த சமப்வம் அப்பகுதியில் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jan 27, 2023, 07:15 PM IST
  • ராசிபுரம் அருகே அவசர ஊர்தி வாகனத்திற்கு வழி விடாமல் நிறுத்திய நபர்.
  • பாதையை வழி மறைத்த நபரால் முத்து மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார்.
  • காவல்துறையினரிடம் தகவல் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
ஆம்புலென்ஸிற்கு வழி விடாமல் நிறுத்திய நபரால் பரிதாபமாக உயிரிழந்த முதியவர்! title=

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த ஓ.சௌதாபுரம் பகுதியை சேர்ந்தவர் விவசாயி முத்து இவருக்கு நேற்று மாலை திடீரென்று மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது.முத்துவின் உறவினர்கள் 108 அவசர ஊர்தி வாகனத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். 

தகவல் அறிந்து முக்கத்தான் காடு தோட்டத்திற்கு அவசர ஊர்தி வாகனம் ஆனது சென்று கொண்டிருந்தது அப்போது அப்பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவர் தனது வழியாக வாகனம் செல்ல அனுமதிக்க முடியாது என கற்களை கொண்டு பாதையை வழி மறைத்துள்ளார். அவசர ஊர்தி வாகனம் ஆனது நீண்ட நேரம் காத்திருந்த பிறகு அங்கிருந்து திரும்பி சென்றது. 

பாதையை வழி மறைத்த நபரால் முத்து மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார். உயிரிழந்த முத்துவின் உடல் அடக்கம் செய்ய முடியாமல் குடும்பத்தினர் உடலை வீட்டில் வைத்து தவித்து வருகின்றனர் இதுகுறித்து வெண்ணந்தூர் காவல்துறையினரிடம் தகவல் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. 108 வாகனத்திற்கு வழி விடாமல் வாகனம் நிற்கும் வீடியோ உள்ளது. 

மேலும் படிக்க | பழனி முருகன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்..! ஆன்லைன் மூலம் பிரசாதம்

ராசிபுரம் அருகே அவசர ஊர்தி வாகனத்திற்கு வழி விடாமல் நிறுத்திய நபரால் பரிதாபமாக முதியவர் உயிரிழந்த சமப்வம் அப்பகுதியில் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க | மோடி பிபிசி ஆவணப்படம்: மொபைலில் பார்த்த பெண் கவுன்சிலர் - டக்கென பிடித்த போலீசார்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News