தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பித்தவர்களின் தரவரிசைப் பட்டியலை நேற்று தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் வெளியிட்டது.
இந்நிலையில் விண்ணப்பதாரர்களுக்கு கலந்தாய்வு இன்று முதல் தொடங்குகிறது. கலந்தாய்வு கொரோனா தொற்று காரணமாக ஐந்து கட்டங்களாக ஆன்லைனில் நடத்த திட்டமிட்டுள்ளது தமிழக அரசு. பொறியியல் படிப்பில் சேருவதற்காக மாணவர்கள் ஜூலை 27ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்திருந்தது. மொத்தம் ஒரு லட்சத்து 51 ஆயிரத்து 870 இடங்கள் காலியாக உள்ளது. சுமார் ஒரு லட்சத்து 74 ஆயிரத்து 930 மாணவர்கள் பொறியியல் படிப்பில் சேருவதற்கு விண்ணப்பித்திருந்தனர். இவற்றில் ஒரு லட்சத்து 39 ஆயிரத்து 33 பேருக்கான தரவரிசைப் பட்டியல் நேற்று வெளியானது.
இதில் 87 ஆயிரத்து 291 மாணவர்களும், 50 ஆயிரத்து 730 மாணவிகளும் 12 திருநங்கைகளும் கலந்து கொள்கின்றனர். மருத்துவ படிப்பு போன்று பொறியியல் படிப்பிலும் அரசு பள்ளி மாணவருக்கு 7.5% ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது இதற்கு 15 ஆயிரத்து 187 பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்த ஆண்டு கலந்தாய்வு தொடங்குவதற்கு முன்பே 12,837 இடங்கள் காலியாக உள்ளது.
கடந்த ஆண்டு 50 ஆயிரத்திற்கும் மேல் இடங்கள் காலியாக இருந்த போது இந்த ஆண்டு அதன் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. பொறியியல் படிப்புகளில் மேல் மாணவர்களுக்கு உள்ள மோகம் குறைந்துள்ளது இதற்கு காரணமாக கூறப்படுகிறது.
தரிவரிசை பட்டியலை தெரிந்துகொள்வது எப்படி?
https://www.tneaonline.org/user/login என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும். விண்ணப்ப எண் மற்றும் பாஸ்வோர்ட் போன்ற சான்றுகளைப் பதிவிட்டு சமர்பிக்கவும். தரவரிசை பட்டியல் திரையில் தோன்றும். தரவரிசைப் பட்டியலை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் அவுட் எடுக்கவும்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR