தமிழுணர்வுடன் விளையாடுவதை இபிஎஸ் நிறுத்திக் கொள்ள வேண்டும் - மு.க ஸ்டாலின்

Last Updated : Sep 12, 2017, 03:59 PM IST
தமிழுணர்வுடன் விளையாடுவதை இபிஎஸ் நிறுத்திக் கொள்ள வேண்டும் - மு.க ஸ்டாலின் title=

சென்னை எக்மோரிலிருந்து சி.பா.ஆதித்தனார் திருவுருவச் சிலையை அகற்றப்பட்டதை அடுத்து எடப்பாடி பழனிசாமிக்கு திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அதைக்குறித்து மு.க ஸ்டாலின் அவர் முகநூல் பதிவில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:- 

சென்னை எக்மோரிலிருந்த "தமிழர் தந்தை"  சி.பா.ஆதித்தனார் அவர்களின் திருவுருவச் சிலையை அகற்றியுள்ள எடப்பாடி திரு. பழனிசாமிக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். 

தமிழக சட்டப் பேரவை தலைவராக பணியாற்றிய அவரது பொன் விழா ஆண்டில் இந்த அராஜகத்தை செய்து அவர் தமிழ் மொழிக்கு ஆற்றிய சேவையை அவமதித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. உடனடியாக திரு சி.பா. ஆதித்தனார் சிலையை அங்கே மீண்டும் நிறுவ வேண்டும். தமிழுணர்வுடன் விளையாடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Trending News