Ex Minister Ponmudi Case Update: கடந்த 2006ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டுகளில் திமுக ஆட்சி காலத்தில் உயர்கல்வித் துறை அமைச்சராக பதவி வகித்தபோது, வருமானத்துக்கு அதிகமாக ஒரு கோடியே 75 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்துக்கள் சேர்த்ததாக, அமைச்சர் பொன்முடி (Ponmudi) மற்றும் அவருடைய மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு எதிராக 2011ஆம் ஆண்டு விழுப்புரத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) வழக்கு பதிவு செய்தது.
அப்போது அவரது சொத்துக்களை லஞ்ச ஒழிப்புத்துறை முடக்கியது. இந்த முடக்கத்தை நீக்கி சிறப்பு நீதிமன்றம் 2016ஆம் ஆண்டு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து லஞ்ச ஒழிப்பு துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் (Madras High Court) மேல் முறையீடு செய்யப்பட்டது.
இந்த மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், சொத்து முடக்கத்தை நீக்கி சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு தவறாக இருந்தாலும், மேல்முறையீட்டு வழக்கில் தண்டனையும், அபராதமும் விதிக்கப்பட்டுள்ளதால் முந்தைய உத்தரவு நீடிக்காது எனக் கூறி லஞ்ச ஒழிப்புத் துறை மேல் முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தார்.
மேலும் படிக்க | மீண்டும் தொடங்கியது சென்னை - தூத்துக்குடி ரயில் சேவை! முழு விவரம்!
மேலும், லஞ்ச ஒழிப்புத் துறை புதிதாக நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிதாக சொத்து முடக்க நடவடிக்கைகளை எடுக்க, இந்த தள்ளுபடி உத்தரவு தடையாக இருக்காது என்றும் நீதிபதி தனது உத்தரவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
முன்னதாக, லஞ்ச ஒழிப்புத்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு தலா மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் தலா ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. தொடர்ந்து, 30 நாள்களுக்கு தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், தேவைப்பட்டால் உச்ச நீதிமன்றத்தை அணுகலாம் என நீதிபதி அறிவுறுத்தி உள்ளார்.
இதன்மூலம், பொன்முடி அவரது சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சர் ஆகிய பதவிகளை இழந்தார். பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக உள்ள ராஜகண்ணப்பனுக்கு, பொன்முடி கவனித்து வந்த உயர் கல்வித்துறை கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது. மேலும், ராஜகண்ணப்பன் முன்னர் கூடுதல் பொறுப்பாக பார்த்து வந்த காதி மற்றும் கிராம தொழில் வாரியம் ஆகியவை அமைச்சர் காந்திக்கு கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நியமனங்களுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
மேலும் படிக்க | திமுகவின் அரசியலையே புரட்டி போடும் தீர்ப்பு! அண்ணாமலை கருத்து
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ