ஐமேக்ஸ் கார்ப்பரேஷன் மற்றும் பிராட்வே மெகாப்ளெக்ஸ் ஆகியவை, கோவையில், பிராட்வேயின் புதிதாகத் திட்டமிடப்பட்ட மெகாப்ளெக்ஸ் தளத்தில் ஐமேக்ஸ் தியேட்டரை உருவாக்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
2022 ஆம் ஆண்டில் இந்த திரையரங்கு திறக்க திட்டமிடப்பட்டுள்ளது என்று ஒரு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய திரையரங்கில் லேசர் தொழில்நுட்பம், நெக்ஸ்ட் ஜெனரேஷன் லேசர் புரொஜெக்ஷன் சிஸ்டம் மற்றும் 12-சேனல் ஒலி அமைப்பு ஆகிய புத்தம் புதிய தொழில்நுட்ப வசதிகள் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் பெரிய நகரங்களைத் தாண்டி மற்ற இடங்களுக்கும் ஐமாக்ஸைக் கொண்டு செல்வதற்கான திட்டம் துவக்கப்படும் என ஐமேக்ஸின் தலைமை விற்பனை அதிகாரி ஜியோவானி டோல்சி கூறினார்.
ALSO READ | ஹீரோ பில்டப்பில் கதையை கோட்டை விட்ட புஸ்பா! படம் எப்படி இருக்கு?
"தென்னிந்தியாவின் பிராந்திய மல்டிபிளக்ஸ் சங்கிலியான பிராட்வே மெகாப்ளெக்ஸுடன் எங்கள் முதல் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இது IMAX ஐ ஒரு புதிய தலைசிறந்த மெகாப்ளெக்ஸ் இடத்திற்கு கொண்டு வந்துள்ளது. பெரிய நகரங்களுக்கு அப்பால் இந்தியாவில் எங்கள் தடத்தை விரிவுபடுத்தும் முயற்சி இது" என்று தலைமை விற்பனையாளர் அதிகாரியான ஜியோவானி டோல்சி, ஐமாக்ஸ் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Imax உடனான கூட்டாண்மை சிறந்த தொழில்நுட்பத்துடன் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்குவ்பதற்கான கூட்டாண்மையாக இருக்கும் என்று பிராட்வே மெகாப்ளெக்ஸ் ஒரு வெளியீட்டில் தெரிவித்துள்ளது.
ALSO READ | 22 ஆண்டுகளுக்குப்பிறகு ரீ ரிலீஸாகும் விஜய் - சிம்ரன் திரைப்படம்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR