தமிழக முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி உடல்நலக் குறைவால் இன்று காலமானார்.
பரிதி இளம்வழுதி 2006 முதல் 2011 வரை தி.மு.க அமைச்சரவையில் செய்தி மற்றும் விளரம்பரத் துறை அமைச்சராக இருந்தார். பின்னர் கடந்த 2013 ஆம் ஆண்டு திமுகவில் இருந்து விலகி அ.தி.மு.கவில் இணைந்தார். பின்னர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.கவில் இருந்து விலகி அ.ம.மு.க-வில் இணைந்தார்.
1996 முத்த 2001 வரை சட்டப்பேரவை துணை சபாநாயகராக பதவி வகித்துள்ளார். மேலும், 1989 முதல் 2011 ஆண்டு வரை எழும்பூர் தொகுதியில் தொடர்ந்து எம்.எல்.ஏவாக இருந்தார்.
இதையடுத்து உடல்நலக்குறைவு காரணமாக பரிதி இளம்வழுதி இன்று காலை உயிரிழந்தார். சென்னை அடையாறில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது மறைவுக்கு கட்சியினர் பலரும் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
சென்னை பெசன்ட் நகரில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்கு உடல் வைக்கப்படவுள்ளது.