முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா மறைவு

தமிழக முன்னாள் சட்டப்பேரவை தலைவரும், திமுக தேர்தல் பணிக்குழு தலைவருமான சேடப்பட்டி முத்தையா (வயது 77) மதுரையில் உடல்நல குறைவால் உயிரிழந்தார்.

Written by - க. விக்ரம் | Last Updated : Sep 21, 2022, 02:36 PM IST
  • சேடப்பட்டி முத்தையா உயிரிழந்தார்
  • 4 முறை சபாநாயகராக இருந்தவர்
  • அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்தவர்
 முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா மறைவு  title=

மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் 3 மாதங்களாக தொடர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சேடப்பட்டி முத்தையா சிகிச்சை பலனின்றி காலமானார். 1991 முதல் 1996ஆம் ஆண்டுவரை அதிமுக ஆட்சி காலத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவராக பதவி வகித்தார் 1977, 1980, 1984, 1991 வருடங்களில் 4 முறை சேடப்பட்டி சட்டப்பேரவைத் தொகுதியிலிருந்து அதிமுக சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டதால் சேடப்பட்டியார் என அழைக்கப்பட்டார். பெரியகுளம் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினராக 2 முறை பதவி வகித்த சேடப்பட்டி முத்தையா 1999 ல் வாஜ்பாய் பிரதமராக இருந்த போது மத்திய தரைவழி போக்குவரத்துத் துறை அமைச்சராக பதவியும் வகித்தார்.

மேலும் படிக்க | திமுகவில் ஜனநாயகம் இல்லை, அதனால்தான் சுப்புலட்சுமி ஜெகதீசன் வெளியேறி உள்ளார்: ஆர்.பி.உதயகுமார்

இதனையடுத்து 2006ஆம் ஆண்டு அதிமுகவிலிருந்து விலகிய சேடப்பட்டி முத்தையா தொடர்ந்து திமுகவில் இணைந்து பணியாற்றினார். சேடப்பட்டி முத்தையாவுக்கு சகுந்தலா எனும் மனைவியும், 2 மகள் மற்றும் 2 மகன்கள் உள்ளனர், இளைய மகன் மணிமாறன் திமுகவின் மதுரை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளராக பதவி வகித்தார் என்பது குறிப்படத்தக்கது. சேடப்பட்டி முத்தையா மறைவுக்கு பல்வேறு கட்சி தலைவர்கள் தங்களது இரங்கலை தெரிவித்துவருகின்றனர்.

மேலும் படிக்க | எடப்பாடி பழனிச்சாமி சாதிய வெறியோடு நடந்து கொள்கிறார்: சாடும் கோவை செல்வராஜ்

மேலும் படிக்க | தமிழகம் முழுவதும் போதை ஒழிப்புக்கான விழிப்புணர்வு பயணத்தை மேற்கொள்ளும் அமைப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News