சென்னை நுங்கம் பாக்கத்தில் மற்றும் காரைக்குடியில் உள்ள முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் வீடுகளில் சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர்.
ரூ.45 கோடி அளவில் அந்நிய செலாவணி மோசடியில் கார்த்தி சிதம்பரம் ஈடுபட்டதாக புகார் எழுந்ததையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்நிய செலாவணி மோசடி தொடர்பாக ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு கடந்த மாதம் அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.
8 இடங்களில் 9 பேர் கொண்டு குழு மூலம் சோதனை நடந்து வருவதாக தகவல் தெரிவிக்கின்றன. இதுவரை எதற்காக இந்த சோதனை நடைபெறுகிறது என்பது குறித்த தகவல் ஏதும் உறுதிபடுத்தப்படவில்லை.
#Correction: CBI raid at former union minister P Chidambaram's residence in Chennai pic.twitter.com/0uw56UwmrG
— ANI (@ANI_news) May 16, 2017