Rameswaram கரையருகே துர்நாற்றம் வீசும் நுரை; MV X-Press Pearl கப்பலின் ரசாயனக் கசிவா?

ராமநாதபுரம் மாவட்ட கடற்கரைப் பகுதிகளில் நீர் மாசுபட்டிருக்கிறது. நீரின் மேற்பரப்பில் நுரை மற்றும் அடர்த்தியான நுரை காணப்படுகிறது. இலங்கைக்கு அருகே MV X-Press Pearl கப்பல் விபத்தில் ஏற்பட்ட கழிவாக இருக்கலாம் என்று இப்பகுதியில் உள்ள மீனவர்கள் சந்தேகிக்கின்றனர்

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Jun 28, 2021, 07:45 PM IST
  • ராமநாதபுரம் மாவட்ட கடற்கரைப் பகுதிகளில் நீர்மாசு
  • நீரின் மேற்பரப்பில் அடர்த்தியான நுரை காணப்படுகிறது
  • இலங்கைக்கு அருகே MV X-Press Pearl கப்பல் விபத்தில் ஏற்பட்ட கழிவாக இருக்கலாம் என சந்தேகம்
Rameswaram கரையருகே துர்நாற்றம் வீசும் நுரை; MV X-Press Pearl கப்பலின் ரசாயனக் கசிவா?   title=

தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்ட கடற்கரைப் பகுதிகளில் மாசுபட்ட நீர் இருப்பதாகத் தெரிகிறது. நீரின் மேற்பரப்பில் அடர்த்தியான நுரை காணப்படுகிறது. துர்நாற்றமும் வீசுகிறது. இலங்கைக்கு அருகே MV X-Press Pearl கப்பல் விபத்தில் ஏற்பட்ட கழிவாக இருக்கலாம் என்று இப்பகுதியில் உள்ள மீனவர்கள் சந்தேகிக்கின்றனர்.

பாரம்பரிய மீனவர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சின்னதம்பி கூறுகையில், மன்னார் பிராந்தியத்தின் பம்பன்-வளைகுடாவில் கடந்த இரண்டு நாட்களாக அசாதாரண நுரை மற்றும் மாசுபாடுகள் காணப்படுவதாகவும், அது கடற்கரையில் ஒதுங்குவதாகவும் இருக்கின்றன. இந்த நுரை கடல் நீரில் கிட்டத்தட்ட 50-100 மீட்டர் பரவியுள்ளது.

இது வழக்கமாக பருவமழையின் போது ஏற்படும் வழக்கமான நுரையாக இருக்காது என்று அவர் சந்தேகம் எழுப்புகிறார். வழக்கத்திற்கு மாறான கழிவுகள் காணப்படுவதாகவும், இதனால் மீன்பிடி சமூகம் அச்சத்தில் உள்ளது என்றும் கூறுகிறார்.

Also Read | இந்திய பெருங்கடலில் எண்ணெய்க் கசிவு; கண்காணிப்பு தீவிரம் - ICG

இந்திய கடலோர காவல்படை மற்றும் இலங்கை அதிகாரிகள் இணைந்து கப்பலில் ஏற்பட்ட தீயை வெற்றிகரமாக அணைத்தபோதிலும், இலங்கை கடற்கரையின் அருகில் (between Colombo and Negombo), மூழ்கிய கப்பலில் இருந்து வெளியேறிய கழிவுகள் பிராந்தியத்தில் கடுமையான சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்ற் அச்சங்கள் எழுந்துள்ளன. இதுபோன்ற நீண்ட கால தாக்கத்தைத் தவிர, காற்று, கடல் நீரோட்டங்கள் போன்றவற்றால் ரசாயனங்கள் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தூரம் கொண்டு செல்லப்படுகின்றன.

இந்த கப்பல் மே கடைசி வாரத்தில் தீப்பிடித்து ஜூன் முதல் வாரத்தில் மூழ்கியது. விபத்துக்குள்ளான கப்பலில் 1486 கொள்கலன் சரக்குகள் இருந்தது. அவை சர்வதேச கடல்சார் ஆபத்தான பொருட்கள் (Maritime Dangerous Goods (IMDG)) கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது. அதில் துரிதமாக பற்றி எரியக்கூடிய நைட்ரிக் அமிலம், மெத்தனால், மெத்தில் அசிடேட், சோடியம் ஹைட்ராக்சைடு போன்றவை இருந்தன. தமிழ்நாட்டின் ராமேஸ்வரத்திற்கும் கப்பல் மூழ்கிய இடத்திற்கும் இடையில் உள்ள தூரம் 240 கி.மீ மட்டுமே.

மண்டபத்தின் மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள் ராமேஸ்வரம் கடற்பகுதியிலிருந்து மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கு எடுத்துச் சென்றுள்ளதாக தெரிகிறது.  

Also Read | மொரீஷியஸில் பயங்கர எண்ணெய் கசிவு: அவசரநிலையை அறிவித்த அரசு..!!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News