தமிழக சட்டப்பேரவையில் போக்குவரத்து துறை மானியக்கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது, புதிய அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர் சிவசங்கர், 5வயது வரையிலான குழந்தைகள் இனி அரசுப் பேருந்தில் இலவசமாக பயணிக்கலாம் என அதிரடியான அறிவிப்பை வெளியிட்டார். ஏற்கனவே 3 வயது வரையிலான குழந்தைகள் அரசுப் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என்ற அறிவிப்பை மாற்றியமைத்து, இந்த புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டிருப்பதாகவும் கூறினார்.
மேலும் படிக்க | மத மாற்ற விவகாரத்தில் அரசு ஏன் விதிமுறைகளை வகுக்கக்கூடாது? -உயர் நீதிமன்றம் கேள்வி
இதேபோல், சென்னை மாநகர பேருந்துகள் பற்றி CHENNAI BUS என்ற செயலி மூலம் அறிந்து கொள்ளலாம் என்றும் அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார். டீசல் விலை உயர்ந்துள்ளபோதும் பேருந்துகளின் கட்டணம் உயர்த்தப்படாது என்றும் உறுதியளித்தார். மேலும், இருசக்கர வாகனங்கள் வைத்திருப்பவர்கள் வாகன காப்பீடு செய்ய வேண்டும் என்றும் அமைச்சர் சிவசங்கர் கேட்டுக்கொண்டார். ஏற்கனவே, பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசுப் பேருந்துகளில் இலவசப் பயணம் என்ற திட்டம் நடைமுறையில் உள்ளது. இப்போது, 5 வயது வரையிலான குழந்தைகளுக்கும் இலவச அரசுப் பேருந்து அறிவிக்கப்பட்டிருப்பதால், பெற்றோர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இந்த திட்டத்தை மாற்றுக் கட்சி எம்.ஏல்.ஏக்களும் வரவேற்றனர். திமுக அரசு பொறுப்பேற்றதும் பெண்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கு அரசுப் பேருந்துகளில் இலவச பயணம் என அறிவிக்கப்பட்டது. இதனால், அரசுக்கு பொருளாதார இழப்பு ஏற்பட்டாலும், சமூக நீதி மற்றும் பெண்கள் வாழ்வியல் முன்னேற்றம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த முடிவை திமுக அரசு அறிவித்தது. இந்த திட்டத்துக்கு பெண்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. வேலைக்கு செல்லும் பெண்கள் அனைவரும் அரசின் இலவச பேருந்தையே பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த திட்டத்தின் மூலம் குடும்ப பொருளாதாரமும் கணிசமாக உயரும் என கணிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தைப் பொறுத்த வரை கடும் நிதிச் சிக்கலில் இருக்கும் மாநிலங்களில் ஒன்றாக உள்ளது. இதனை சரிசெய்ய பல்வேறு வழிகளில் கவனம் செலுத்தி வரும் திமுக அரசு, இத்தகைய அறிவிப்பை வெளியிட்டிருப்பது மகிழ்ச்சியளிப்பதாக அரசியல் நோக்கர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR