ஜூலை 1 முதல் டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்; சிலிண்டர் தட்டுப்பாடு?

ஜூலை 1ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக தென்னிந்திய பல்க் எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jun 23, 2019, 11:44 AM IST
ஜூலை 1 முதல் டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்; சிலிண்டர் தட்டுப்பாடு? title=

சென்னை: ஜூலை 1ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக தென்னிந்திய பல்க் எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

பல்க் எல்பிஜி டேங்கர் லாரிகள் சமையல் எரிவாயுகளை கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. டேங்கர் லாரி சங்கத்தின் தரப்பில் இருந்து, சுமார் 4500 எல்.பி.ஜி. டேங்கர் லாரிகளுக்கும் வேலைவாய்ப்பு அளிப்பதாக ஒப்புதல் அளித்திருந்த அதிகாரிகள், சுமார் 740 எல்.பி.ஜி. டேங்கர் லாரிகளுக்கு வாய்ப்பளிக்காமல் இழுத்தடிப்பதாக புகார் தெரிவித்துள்ளனர். பலமுறை சொல்லியும் கண்டுக்கொள்ளவில்லை. 

எனவே இதுவரை வேலைவாய்ப்பு அளிக்காத லாரிகளுக்கு வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும் என்றும், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் வணிக ஒப்பந்தம் வழங்க வலியுறுத்தியும் வரும் ஜூலை 1 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தென்னிந்திய பல்க் எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

Trending News