மிக்ஜாம் புயல் நிவாரண நிதி எப்போது கொடுக்கப்படும்? யார் யாருக்கு கிடைக்கும்?

Michaung cyclone relief fund: மிக்ஜாம் புயல் நிவாரண தொகையை தமிழ்நாடு அரசு அறிவித்திருக்கும் நிலையில், எப்போது முதல் கொடுக்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.  

Written by - S.Karthikeyan | Last Updated : Dec 9, 2023, 05:07 PM IST
  • மிக்ஜாம் புயல் நிவாரண நிதி அறிவிப்பு
  • நியாயவிலைக் கடைகள் மூலம் நேரடியாக விநியோகம்
  • திங்கட்கிழமை முதல் கொடுக்கப்பட வாய்ப்பு
மிக்ஜாம் புயல் நிவாரண நிதி எப்போது கொடுக்கப்படும்? யார் யாருக்கு கிடைக்கும்?  title=

மிக்ஜாம் புயல் நிவாரண தொகை அறிவிப்பு

மிக்ஜாம் புயலில் சிக்கி உயிரிழந்தவர்கள், குடிசை வீடுகளை இழந்தவர்கள் மற்றும் படகுகளை இழந்தவர்கள் உள்ளிட்டவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரண தொகையை அறிவித்துள்ளது. வழக்கம்போல் அறிவிக்கப்படும் தொகையிலிருந்து குறிப்பிட்ட தொகையை உயர்த்தியும் அறிவித்துள்ளார். 

மிக்ஜாம் புயல் நிவாரண தொகை எவ்வளவு?

மிக்ஜாம் புயலால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத் தொகையாக ரூபாய் 6 ஆயிரம் வழங்கப்படும். புயல், வெள்ளத்தினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு, இழப்பீட்டுத் தொகையாக 5 இலட்சம் ரூபாயும், சேதமடைந்த குடிசைகளுக்கு 8 ஆயிரமும் கொடுக்கப்படும். மழையினால் பாதிக்கப்பட்ட (33 விழுக்காடு மற்றும் அதற்கு மேலாக) நெற்பயிர் உள்ளிட்ட இறவைப் பாசனப் பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு 17 ஆயிரம் ரூபாய் கொடுக்கப்படும்.

மேலும் படிக்க | மிக்ஜாம் புயல்: நிவாரண தொகை அறிவித்த தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின்

பல்லாண்டு பயிர்கள் மற்றும் மரங்களுக்கு இழப்பீடாக ஹெக்டேர் ஒன்றுக்கு 22,500 ரூபாய். - மழையினால் பாதிக்கப்பட்ட (33 விழுக்காடு மற்றும் அதற்கு மேலாக) மானாவாரிப் பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு 8,500 ரூபாய் கொடுக்கப்படும். எருது, பசு உள்ளிட்ட கால்நடைகளின் உயிரிழப்பு நிவாரணமாக 37,500 ரூபாய் கொடுக்கப்படும். வெள்ளாடு, செம்மறி ஆடு உயிரிழப்பு நிவாரணமாக 4,000 ரூபாய் கொடுக்கப்படும். 

மீனவர்களுக்கு முழுமையாக சேதமடைந்த கட்டுமரங்களுக்கு (மீன்பிடி வலைகள் உட்பட 50 ஆயிரம் ரூபாய், பகுதியாக சேதமடைந்த கட்டுமரங்களுக்கு 15 ஆயிரம் ரூபாய் கொடுக்கப்படும். முழுவதும் சேதமடைந்த வல்லம் வகை படகுகளுக்கு வழங்கப்படும் அதிகபட்ச மானியத் தொகை ஒரு இலட்சம் ரூபாயாகவும், சேதமடைந்த இயந்திரப் படகுகளுக்கு 7.50 இலட்சமாகவும் கொடுக்கப்படும். சேதமடைந்த வலைகளுக்கு 15 ஆயிரம் ரூபாய் கொடுக்கப்படும்.

எப்போது? எங்கு நிவாரண தொகை வழங்கப்படும்?

மிக்ஜாம் புயல் நிவாரண தொகை திங்கட்கிழமை முதல் வழங்கப்பட வாய்ப்பு. அந்தந்த ரேஷன் கடைகள் மூலம் ரொக்கமாக வழங்க உள்ளது தமிழ்நாடு அரசு. நாளொன்றுக்கு 200 டோக்கன் வீதம் வழங்கவும், நிவாரணத்தொகை முழுவதும்  கொடுத்து முடிக்கும் வரை நியாயவிலை கடைகளுக்கு விடுமுறை இல்லை. குடும்ப அட்டை இல்லாதவர்களுக்கும் வழங்குவது குறித்தும் அரசாணையில் தெரிவிக்கப்பட்ட இருக்கிறது. 

யாருக்கு யார் கிடைக்கும்... கிடைக்காது?

சென்னையில் அனைத்து தாலுக்காவிலும், காஞ்சிபுரம் , செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட தாலுக்காவை தவிர பாதிப்பில்லாத  தாலுக்காக்களில் நிவாரணத்தொகை இல்லை. 

மேலும் படிக்க | மின்னஞ்சல் மூலம் இளம் பெண்ணுக்கு அந்தரங்க புகைப்படங்களை அனுப்பிய வாலிபர் கைது

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News