கடந்த வாரம் தமிழ்நாடு போக்குவரத்துதுறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் தனியார் நிறுவனங்களை போல இனி அரசு பேருந்துகளிலும் பார்சல் அனுப்பும் நடைமுறை கொண்டு வர உள்ளதாக கூறி இருந்தார். வெகு தூரங்களில் இருந்து அரசு பேருந்து மூலம் குறிப்பிட்ட அளவிலான பொருட்களை பார்சல் அனுப்பி கொள்ளலாம். மற்ற கட்டணங்களை விட இதில் குறைவாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. அந்தவகையில் இதற்க்கான அறிவிப்பும் தற்போது வெளியாகி உள்ளது. ரூபாய் 200-ல் இருந்து அதிகபட்சம் ரூபாய் 400 வரை கிலோ மீட்டர் பொறுத்து வசூல் செய்யப்பட உள்ளது. பார்சல் அனுப்ப அருகிலுள்ள தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்து கழக கிளை மேலாளரிடம் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் படிக்க | அரசு மருத்துவமனைகளில் அதிகரிக்கும் உயிரிழப்பு - அரசுக்கு சீமானின் வலியுறுத்தல்
வெளியான அறிவிப்பில், "அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் இயக்கப்படும் பேருந்துகளில் உள்ள லக்கேஜ் தினசரி மற்றும் மாத வாடகை அடிப்படையில் பொதுமக்கள் தங்களது பொருள்கள் மற்றும் கொரியர் ஆகியவற்றை தொலைதூரங்களில் உள்ள தங்களது உறவினர்களுக்கும், வியாபார நோக்கத்திற்காக குறைவான கட்டணத்தில் அனுப்புவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. இத்திட்டம் வரும் ஆகஸ்ட் மாதம் 3ம் தேதி முதல் செயல்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்" என்று கூறப்பட்டுள்ளது.
80 கிலோமீட்டர் வரை தினசரி பார்சல் அனுப்புவதற்கான கட்டண விவரம்:
திருச்சி - சென்னைக்கு பார்சல் அனுப்ப ரூபாய் 210
மதுரை - சென்னை பார்சல் அனுப்ப ரூபாய் 300
திருநெல்வேலி - சென்னை பார்சல் அனுப்ப ரூபாய் 390
தூத்துக்குடி - சென்னை பார்சல் அனுப்ப ரூபாய் 390
செங்கோட்டை - சென்னை பார்சல் அனுப்ப ரூபாய் 390
கோயம்புத்தூர் - சென்னை பார்சல் அனுப்ப ரூபாய் 330
ஓசூர் - சென்னை பார்சல் அனுப்ப ரூபாய் 210
மேலும் இந்த தொகையுடன் 18 சதவீதம் ஜிஎஸ்டி வரியும் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | நில அளவையர் உள்ளிட்ட 1089 காலிப் பணியிடங்கள் - டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ