இளம் பெண்ணை மிரட்டி வண்புணர்வு செய்த சாமியார், மனைவியுடன் கைது

சென்னையில் இளம் பெண்ணை மிரட்டி தொடர் பாலியல் தொந்தரவுக்குள்ளாக்கி வந்த சாமியாரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 2, 2023, 11:22 AM IST
இளம் பெண்ணை மிரட்டி வண்புணர்வு செய்த சாமியார், மனைவியுடன் கைது  title=

சென்னை கொளத்தூர் சத்யா நகர் பகுதியைச் சேர்ந்த இளம்பெண், விநாயகபுரம் சூரப்பட்டு சாலையில் உள்ள ஷீரடிபுரம் சர்வ சக்தி பீட நிர்வாகி சங்கர நாரயணன் மீது மாதவரம் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், அந்த சாமியார் தன்னை தொடர் பாலியல் தொந்தரவுக்குள்ளாக்கி வருவதாகவும், அவரை கைது செய்ய வேண்டும் என மனுவில் கோரியிருந்தார். இது குறித்து காவல்துறை விசாரணை நடத்தியதில், அதிர்ச்சியான தகவல்கள் கிடைத்தன. பாலியல் தொந்தரவுக்குள்ளான பெண், 2012 ஆம் ஆண்டு உடல்நிலை சரியில்லை என்று முதன்முதலாக அந்த கோவிலுக்கு சென்றுள்ளார். 

ALSO READ | ஆசிரியரின் பாலியல் அத்துமீறலால் மீண்டும் ஒரு மரணம்!

பின்னர் அடுத்த ஆண்டு, அதாவது 12 ஆம் வகுப்பு படிக்கும்போது கோவிலுக்கு மீண்டும் விபூதி வாங்கச் சென்றபோது, அந்த சாமியார் மாணவிக்கு ஜூஸில் மயக்க மருந்து கலந்து கொடுத்து வண்புணர்வு செய்துள்ளார். இது அடுத்தடுத்த ஆண்டுகளிலும் தொடர்ந்துள்ளது. வெளியில் கூறினால் அசிங்கமாகிவிடும் எண்ணிய அந்தப் பெண், தனக்கு ஏற்பட்ட சங்கடங்களை தொடர்ந்து மறைத்து வந்துள்ளார். இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட அந்த சாமியார், இளம்பெண்ணுக்கு திருமணமான பின்னும் விடாமல் தொடர்ச்சியாக தொந்தரவு செய்துள்ளார்.

இதனால் கர்ப்பம் அடைந்த இளம்பெண்ணுக்கு குழந்தையும் பிறந்துள்ளது. இதனை யாரிடமும் சொல்லாமல் இருந்த வந்த அப்பெண்ணை சாமியார் மீண்டும் மீண்டும் இச்சைக்கு இணங்குமாறு தொந்தரவு செய்துள்ளார். அவரின் தொடர்ச்சியான தொந்தரவுகளால் மன உளைச்சலுக்குள்ளான அந்த பெண், கடைசியாக மாதவரம் மகளிர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். சாமியாரின் அத்துமீறல்களுக்கு உடந்தையாக இருந்த அவரது மனைவியையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

ALSO READ | பொள்ளாச்சி அருகே 1,308 ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல்; மூவர் கைது

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News