விண்ணைமுட்டும் உச்சத்தில் தங்க விலை... ஒரே நாளில் சவரனுக்கு ரூ.976 உயர்வு..!

தமிழகத்தில் தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.976 உயர்ந்து ரூ.42,592க்கு விற்பனை செய்யப்படுகிறது..!

Last Updated : Aug 5, 2020, 03:54 PM IST
விண்ணைமுட்டும் உச்சத்தில் தங்க விலை... ஒரே நாளில் சவரனுக்கு ரூ.976 உயர்வு..! title=

தமிழகத்தில் தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.976 உயர்ந்து ரூ.42,592க்கு விற்பனை செய்யப்படுகிறது..!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.976 உயர்ந்துள்ளது. ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.5,324-க்கும், சவரன் ரூ.42,592-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.79.20-க்கு விற்கப்படுகிறது.

கொரோனா பொது முடக்கத்திற்குப் பின்னர் தங்கத்தின் விலை சர்வதேச பொருளாதாரத்தில் ஏற்பட்ட மந்தத்தின் காரணமாக கிடுகிடுவென உயர்வடைந்து வருகிறது. இதனால் தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் சவரன் ரூ.40 ஆயிரத்தை தாண்டியது.

இந்நிலையில், தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.976 உயர்ந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.976 உயர்ந்து  ரூ.42,592-க்கு விற்பனை செய்யப்படுகிறது, மேலும் ஒரு கிராம் 22 கேரட் ஆபரண தங்கம் விலை 122 ரூபாய் உயர்ந்து 5,324க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், சென்னையில் ஆபரண வெள்ளியின் விலையும் கிராமிற்கு ரூ. 2 உயர்ந்து ரூ.79.20 க்கு விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News