கிசுகிசு : ஆளும் தரப்பில் கொடுக்கப்படும் நெருக்கடியால் தலைவலியில் நடிகர்..!

Gossip, கிசுகிசு : அரசியல் கட்சி மாநாட்டுக்கு இடம் தேடிக் கொண்டிருக்கும் அந்த நடிகருக்கு எல்லா தரப்பில் இருந்தும் நெருக்கடி கொடுக்கப்படுகிறதாம். 

Written by - S.Karthikeyan | Last Updated : Aug 12, 2024, 10:56 AM IST
  • மாநாட்டுக்கு இடம் தேடும் நடிகர்
  • ஆளும் தரப்பில் கொடுக்கப்படும் நெருக்கடி
  • சிலருடன் தீவிர ஆலோசனை
கிசுகிசு : ஆளும் தரப்பில் கொடுக்கப்படும் நெருக்கடியால் தலைவலியில் நடிகர்..! title=

Gossip News Tamil : பரபரப்பாக டீ ஆத்திக் கொண்டிருந்த மாஸ்டரை சுமார் ரெண்டு நாட்களுக்குப் பிறகு சந்திக்க வந்தான் குசும்பன். ‘எங்கப்பா உன்ன ரெண்டு நாளா ஆளைக் காணோமே?’ என மாஸ்டர் கேள்வியை போட்டவுடன், ‘அண்ணே ஒரு மாதிரியா இருந்ததால, தலைநகரத்துல இருந்து கெளம்பி டெல்டா பக்கம் சுற்றுலா போய்ட்டு வந்தேன்’ என்றான் குசும்பன். ‘சரி, நடிகர் கூடாரத்துல ஏதோ சலசலப்பா இருக்காமே, விஷயம் ஏதாவது கேள்விபட்டீரா?’ என கேட்க, ’அதலெல்லாம் தெரியமலா இருக்கும். கேள்விபட்டேன். சொல்றேன் கேளுங்க’ என விஜயமானவரின் செயல்பாடுகளை சொல்ல ஆரம்பித்தான் குசும்பன்.

‘அண்ணே!, அரசியல் கட்சி ஆரம்பிச்ச நடிகரோட கூடாரத்துல இப்போவே சலசலப்பு உருவாகிடுச்சு. நிர்வாகிகள் பலபேர் ஆனந்தமானவர் மேல அதிருப்தி. மாவட்ட பொறுப்பாளர்களை கொஞ்சம் கூட மதிக்காத அவரு,  துடுக்கா வேற பேசுறாராம். போதாக்குறைக்கு மாநாட்டுக்கு இடம் தேர்வு பண்ற பொறுப்பு இவரு தான் கவனிச்சிட்டு இருக்கிறாரு. அதுவும் ஒன்னும் கைகூடன மாதிரி தெரியல. பல ஊர்கள தேர்வு செஞ்சி, அங்க இருக்கிற இடத்தை நேராவே போய் பார்த்துட்டு இருக்கிறாரு ஆனந்தமானவர். ஆனால், போற ஊர்ல இருக்கிற நிர்வாகிகள்கிட்ட இதைப் பத்தி ஒன்னுமே சொல்றது இல்லையாம்.

அவங்களும் மத்தவங்கள மாதிரி டிவிய பார்த்துதான் தெரிஞ்சுகிறாங்களாம். மலைக்கோட்டைக்கு போனவரு அங்க இருக்கிற நிர்வாகிகள்கிட்ட ஏதுமே சொல்லலையாம். மாம்பழம் மாவட்டத்துக்கு போனப்பவும் இதே மாதிரி தான் செஞ்சாராம். அதனால, இது சரிப்பட்டு வர்ற மாதிரி தெரியலை என இப்போவே பல பேர் சோர்ந்துபோய் இருக்கிறாங்களாம். நடிகர் கிட்ட இவர பத்தி எப்படி சொல்லாம்னு பல ரசிகமணிகள் யோசிச்சிட்டு இருக்காங்களாம்" என்றான் குசும்பன். 

மேலும் படிக்க | கிசுகிசு : செம கடுப்பில் குடில் கட்சி தலைவர், கலகலக்கும் கூடாரம்..!

‘அது சரி... எல்லா சின்ன பசங்க, அரசியல் களத்துல எல்லாம் பெரிய அனுபவம் இருக்காது. சின்ன சின்ன விஷயத்துக்கூட பெருசா ரியாக்ட் பண்ணதானே செய்வாங்க. இதை எப்படி அவரு சமாளிக்கப்போறாரோ?.. தெரியலை. அப்புறம், மாநாட்டுக்கு இடத்த தேர்வு பண்றதுல்ல என்ன பிரச்சனை?’ என டீ மாஸ்டர் கேட்டார். ‘இப்போ தான் இதுவரைக்கும் நாம பேசுன விஷயத்தோட கிளைம்மாக்ஸ். நடிகர் கட்சிக்கு மாநாடுக்கு இடம் எங்கபோய் பார்த்தாலும் அங்க ஆளும்தரப்பு நிர்வாகிகளால் நெருக்கடி கொடுக்கப்படுதாம். அதனால், இப்போ வரைக்கும் ஒரு இடம் கூட செட் ஆகல. ஒரு சில இடங்களுக்கு ஓகே சொன்ன நில உரிமையாளர்களும், இரண்டு நாள் கழிச்சி நீங்க வேற இடம் பார்த்துக்கங்கனு சொல்லிட்டாங்களாம். 

அதனால், இப்போ வரைக்கும் ஒருஇடம் கூட நடிகருக்கு கிடைக்கல. களத்தில வேலை பார்த்துட்டு இருக்கிற ஆனந்தமானவர், இடம் ஏன் கிடைக்கல, என்னென்ன நெருக்கடிகள் எல்லாம் வருதுன்னு நடிகர் கிட்ட தினம் தினம் சொல்லி புலம்பிட்டு இருக்கிறாராம். நடிகரும் கொஞ்சம் அப்செட் தானாம். ஒரு இடத்தை தேர்வு செய்யுறதுக்கே இவ்வளவு பிரச்சனை வருதேனு யோசிக்கும் அவரு, என்ன பண்ணலாம்னு நாலு பேர்கிட்ட கேட்டுட்டு இருக்கிறாராம். ஆளும் தரப்பு நிர்வாகிகளோ, எப்படியும் எங்கள எதிர்த்து தான் அரசியல் பண்ணப்போறீங்க, அப்போ எங்க வெயிட்ட காட்ட வேணாமா? என அரசியல் விளையாட்ட ஆரம்பிச்சிட்டாங்களாம். இதனால், நடிகர் தரப்பு தலைவலியில் இருக்கு’ என திரைக்கதையை முடித்தான் குசும்பன்.

மேலும் படிக்க | தாழ்தள பேருந்தில் இந்த வசதிகளும் இருக்கிறது - மக்கள் பயன்படுத்தி கொள்ளலாம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News