தூத்துக்குடி: கைவிட்ட அரசு... பதநீர் விற்ற பணத்தில் பள்ளி நடத்தும் கிராம மக்கள்!

தூத்துக்குடி அருகே பதநீர் விற்பனை செய்து அதில் வரும் வருமானத்தில் பள்ளியை நடத்தி வரும் கிராம மக்கள் ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.  

Last Updated : Apr 4, 2022, 10:48 AM IST
  • தரம் உயர்த்த போதிய நிதி இல்லாததால் கைவிடப்பட்ட பள்ளி
  • பதநீர் விற்று வரும் பணத்தில் பள்ளியை நடத்தி வரும் கிராம மக்கள்
  • ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை
தூத்துக்குடி: கைவிட்ட அரசு... பதநீர் விற்ற பணத்தில் பள்ளி நடத்தும் கிராம மக்கள்! title=

தூத்துக்குடி அருகே  பனைமரங்கள் சூழ அமைந்துள்ள கிராமம் அந்தோணியார்புரம். பனைமரங்கள் அதிகம் என்பதால் இப்பகுதியில் உள்ள மக்கள் பனைத்தொழில் செய்து வருகின்றனர்.  ஒரு காலத்தில். பதநீரை காய்ச்சி, கருப்பட்டி தயாரிப்பது பிரதான தொழிலாக இருந்த நிலையில் தற்போது பதநீரோடு மட்டும் நின்றுவிட்டது. 

அந்தோணியார்புரம் பதநீருக்கு அதன் சுற்றுவட்டார பகுதி மக்களிடம் எப்போதும் நல்ல வரவேற்பு உண்டு. சீசன் நேரத்தில் அந்தோணியார்புரத்தை கடந்து செல்லும் மக்கள் பதநீரை ருசிக்காமல் சென்றதில்லை என்பதே உண்மை. முன்பு நூற்றுக்கணக்கான பனை தொழிலாளர்கள் இருந்த நிலையில் தற்போது இந்த கிராமத்தில் குறைந்த எண்ணிக்கையிலான தொழிலாளர்களே உள்ளனர். 

இந்த கிராமத்தில் உள்ள ஆர்.சி. நடுநிலை பள்ளியில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை அரசு உதவி பெறும் பள்ளியாகவும், 6,7,8-ம் வகுப்புகள் சுயநிதி வகுப்புகளாகவும் நடைபெற்று வருகின்றன. ஆனால், சுயநிதி வகுப்புகளுக்கு பாடம் சொல்லித் தரும் ஆசிரியர்களுக்கு தேவையான ஊதியம், நிர்வாக செலவு உள்ளிட்டவைகளுக்கு போதிய பணம் இல்லாததால், அதற்கான செலவை இந்த கிராம மக்கள் பதநீர் விற்று அதன் மூலம் வரும் வருவாயை கொண்டு நடத்துகின்றனர். 

மேலும் படிக்க | தூத்துக்குடி : பெற்ற தாயை கொலை செய்த 17 வயது சிறுமி!

Thoothukudi

தரம் உயர்த்தப்பட்ட பள்ளிக்கு தேவையான பணம் ஒதுக்கப்படாத காரணத்தால் இதனை கைவிடும் முயற்சிகள் நடத்ததாக கூறப்படுகிறது. ஆனால் குழந்தைகளின் எதிர்காலம் முக்கியம் என்பதால் அந்தோணியார்புரம் கிராம மக்களே குழு அமைத்து பள்ளிக்கு தேவையான நிதியை திரட்டி வங்கியில் சேமித்து வருகின்றனர். 

இதற்காக தனித்தானியாக பதநீர் விற்காமல் கிராம மக்கள் அனைவரும் இணைந்து கூட்டாக பதநீர் விற்பனை செய்வது என முடிவு செய்தனர். ஒற்றுமையின் பலனாக உருவான இந்த திட்டத்தின் மூலம் கிடைக்கும் பணம் பள்ளியின் கல்விக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கி பள்ளியை கிராம மக்களே திறம்பட நடத்தி வருகின்றனர். 

school

அந்தோணியார்புரம் கிராம மக்களின் ஒரே கோரிக்கையாக பள்ளியை அரசே ஏற்று நடத்த வேண்டும் எனபதாகவே உள்ளது. தமிழகத்தில் உள்ள மற்ற கிராமங்களுக்கு எல்லாம் முன் உதாரணமாக திகழும் அந்தோணியார்புரத்தை சேர்ந்த மக்களுக்கு பாராட்டுக்களும் குவிந்து வருவது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | தூத்துக்குடி: அரை சவரன் நகைக்காக பெண் கொலை - பட்டப்பகலில் அரங்கேறிய பயங்கரம்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News