அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்டு பேசியபோது கொசுவால் பரவும் டெங்கு, மலேரியாவைப் போன்றது சனாதனம் அதனை கட்டாயம் ஒழித்தே தீர வேண்டும் என பேசினார். அவருடைய இந்த பேச்சு ஆதரவு மற்றும் எதிர்ப்பு குரல்கள் எழுந்தன. குறிப்பாக சாதிய தீண்டாமை நிலவுவதற்கு காரணமே சனாதனம் தான், அதனை ஒழிப்பதில் தவறில்லை என ஆதரவு கருத்துகள் எழும்போது, இந்து மதத்தை ஒழிக்க வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் பேசிவிட்டார் என திரித்து பாஜக மற்றும் வலதுசாரி அமைப்புகள் வட மாநிலங்கள் முழுவதும் பேச தொடங்கிவிட்டனர். காங்கிரஸ் இப்போது திமுக கூட்டணியில் இருப்பதால், அக்கட்சிக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தும் நோக்கில் இத்தகைய போராட்டங்கள் உத்தரப்பிரதேசம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மேலும் படிக்க | AR Rahman இசை நிகழ்ச்சி குளறுபடி - விரைந்து விசாரிக்க டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு!
உதயநிதி ஸ்டாலின் மற்றும் ஆ.ராசா ஆகியோரின் உருவப்படங்களுக்கு செருப்பு மாலை அணிவித்து ஊர்வலமாக எடுத்துச் செல்வதும், இருவருக்கும் எதிராக கடுமையான கோஷங்களை எழுப்பியும் வருகின்றனர். இதற்கு பதிலளித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஒருபோதும் தன்னுடைய பேச்சுக்கு மன்னிப்பு கேட்கப்போவதில்லை என்றும், எந்த வழக்கு வந்தாலும் அதனை சட்டரீதியாக எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும் அறிவித்திருக்கிறார். இந்நிலையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பேச்சைக் கண்டித்து திருச்சி ஸ்ரீரங்கத்தில் இந்து முன்னணி சார்பில் போராட்டம் நடைபெற்றது. இதில் பாஜகவின் மூத்த தலைவர் ஹெச்.ராஜா கலந்து கொண்டு உதயநிதியை கடுமையாக விமர்சித்தார். மேலும், பெரியார் குறித்து எழுதப்பட்டிருக்கும் புத்தகத்தை மேற்கோள் காட்டியும் அவர் பேசினார்.
jaBJP) September 11, 2023
அவர் பேசும்போது, " உண்மைகளை பொய் என்றும், பொய்யை உண்மைகள் என்று பேசுபவர்கள் தி.மு.க-வினர். ஆண்டாள் நாச்சியாரை அவதூறு பரப்பிய வைரமுத்துவை கைது செய்யாமல், சனாதனம் பற்றி பேசும் உதயநிதியை கைது செய்யாமல், தமிழக காவல்துறை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கிறது. மிக விரைவில் திராவிட இயக்கங்களை இல்லாமல் அழித்து, பாரதிய ஜனதா கட்சி தமிழகத்தில் ஆட்சிக்கு வரும். பகவத் கீதையில், குணத்தின் அடிப்படையில் வர்ணங்களை உருவாக்கி இருப்பதாக கிருஷ்ணபரமாத்மா குறிப்பிடுகிறார். அதே போல, திருவள்ளுவரும் அந்தணர், அரசர், வணிகர் வேளாளர் என்ற நான்கு வர்ணங்களை குறிப்பிட்டு இருக்கிறார். பகவத் கீதையில் சொன்னதை பேசிய வள்ளுவர் சனாதனி.
talin) September 11, 2023
சனாதனத்தை இழிவாக பேசிய உதயநிதி குடும்பத்தை சும்மா விடமாட்டேன் என்று ஒருவர் கூட சொல்ல வரவில்லை. சனாதனத்தில் ஏற்றத் தாழ்வுகள் இல்லை. திருமாவளவனும், சுபவீர பாண்டியனும் பிறந்த பிறகு தான் ஏற்றத் தாழ்வுகள் வந்தன." என்று பேசினார்.
(@Anbil_Mahesh) September 11, 2023
இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட ஹெச்.ராஜா உள்ளிட்ட 150 பேரை காவல்துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றனர். அந்த தகவல் வெளியானதும் டிவிட்டரில் கொசுவர்த்தி புகைப்படத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பகிர, அதற்கு ‘நீ விளையாடு நண்பா’ என அமைச்சர் அன்பில் மகேஷ் கமெண்ட் அடித்துள்ளார்.
மேலும் படிக்க | ’ஏழரை லட்சம் கோடி ஊழலுக்கு பதில் சொல்ல வக்கில்ல’ அமைச்சர் உதயநிதி விளாசல்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ