ரயில் டிக்கெட் வாங்கவே தகுதியில்ல... கருணாநிதி குடும்பத்திற்கு இத்தன கோடி எப்படி வந்துச்சு - ஹெச். ராஜா

H Raja On DMK Files: ரயில் டிக்கெட் வாங்க கூட தகுதி இல்லாத கருணாநிதி குடும்பத்தினருக்கு, இத்தனை லட்சம் கோடி ரூபாய் எப்படி வந்தது என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கேள்வியெழுப்பியுள்ளார். 

Written by - Sudharsan G | Last Updated : Apr 15, 2023, 10:09 PM IST
  • அண்ணாமலை வெளியிட்டது ஊழல் பட்டியல் அல்ல, சொத்து பட்டியல் - ஹெச். ராஜா
  • திமுகவினர் 17 பேரும் வாய் திறக்கவில்லை - ஹெச். ராஜா
ரயில் டிக்கெட் வாங்கவே தகுதியில்ல... கருணாநிதி குடும்பத்திற்கு இத்தன கோடி எப்படி வந்துச்சு - ஹெச். ராஜா title=

H Raja On DMK Files: குஜராத்தில் நடைபெற உள்ள சௌராஷ்ட்ரா தமிழ் சங்கம் நிகழ்ச்சிக்கு மதுரை ரயில் நிலையத்தில் இருந்து சிறப்பு ரயிலில் பயணம் செய்த பயணிகளை பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா இனிப்புகள் வழங்கி, வழியனுப்பி வைத்தார்.

இந்த நிகழ்வில் செய்தியாளர்களை சந்தித்து ஹெச்.ராஜா பேசும்போது,"பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட சொத்து பட்டியலில் உள்ள 17 பேரும், 'அண்ணாமலை வெளியிட்ட சொத்துக்கள் எங்களுடைய சொத்துக்கள் அல்ல. அண்ணாமலை தெரிவித்ததற்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை' என தெரிவிக்க வேண்டியது தானே.

ஊழல் பட்டியல் அல்ல, சொத்து பட்டியல்

இந்த சொத்துக்களுக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை அனாவசியமாக அண்ணாமலை கூறி வருகிறார் என திமுகவினர் நீதிமன்றம் செல்ல வேண்டியது தானே?. மேலும் பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட சொத்து பட்டியல் குறித்து நேரம் கொடுத்து இருக்கிறார். இன்னும் பத்து நாட்கள் கழித்து இதுகுறித்து அனைத்து சந்தேகங்களும் கேட்கலாம் என அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்க | ஆருத்ரா நிறுவனம் அண்ணாமலைக்கு சொந்தமானதா? விசிக வன்னி அரசு கேள்வி!

அண்ணாமலை சொல்லியது ஊழல் பட்டியல் அல்ல, சொத்து பட்டியல். அண்ணாமலை வெளியிட்டுள்ள சொத்து பட்டியலில் தனியார் கம்பெனிகள், கல்லூரி நிறுவனங்கள் என எதுவும் எங்களுடையது அல்ல என திமுகவினரும், அந்த 17 பேரும் வாய் திறந்திருக்கிறார்களா? 

இவ்வளவு லட்சம் கோடி பணம் எப்படி வந்தது. ரயில் டிக்கெட் வாங்க கூட தகுதி இல்லாத நபர் கருணாநிதி.
கருணாநிதியின் குடும்பத்திற்கு இத்தனை லட்சம் கோடி சொத்துக்கள் எப்படி வந்தது? சினிமாவில் கருணாநிதி, கதை எழுதினால் எழுதியதற்கு மட்டும்தான் காசு.

ஊழல் செய்ததால் வந்தது

இவ்வளவு லட்சம் கோடிகள் சொத்துக்கள் எப்படி வந்தது ஊழல் செய்ததால் வந்தது. ஏற்கனவே திமுக அரசு  ஒரு கரும்புக்கு 13 ரூபாய் திருடிய அரசாங்கம் என்று நான் நிரூபித்து இருக்கிறேன். அந்த மாதிரி திருடி, திருடி இத்தனை லட்சம் கோடி சொத்துக்கள் வந்திருக்கிறது.

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் கருத்துக்களுக்கு மட்டும் தான் பதில் சொல்லுவேன். வேறு யாருக்கும் பதில் சொல்ல மாட்டேன்" என்றார். ஓபிஎஸ் மாநாடு குறித்த கேள்விக்கு,"என்னுடைய வாழ்த்துக்கள்" என்றார்.

மேலும் படிக்க | "பில் தானே கேட்டீங்க சீரியல் நம்பருமா கேட்டீங்க" வானதி சீனிவாசனின் பதில்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News