பழனி முருகன் கோயில் கும்பாபிஷேகம்: பக்தர்கள் முன்பதிவு செய்வது எப்படி...? முழு விவரம்

Pazhani Murugan Temple Kumbabishekam: பழனி முருகன் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க விரும்பும் பக்தர்கள் முன்பதிவு செய்வது தொடர்பான வழிகாட்டு முறைகளை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Written by - Sudharsan G | Last Updated : Jan 14, 2023, 07:33 PM IST
  • மொத்தம் 6 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி.
  • இணையதளம் மூலம் பதிவு செய்ய வேண்டும்.
  • ஜன. 20 வரை முன்பதிவு செய்யலாம்.
பழனி முருகன் கோயில் கும்பாபிஷேகம்: பக்தர்கள் முன்பதிவு செய்வது எப்படி...? முழு விவரம் title=

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவில் கும்பாபிஷேகம் வருகிற ஜன. 27ஆம் தேதி அன்று நடைபெற உள்ளது. இது தொடர்பான அனைத்து துறை அலுவலர்கள் ஒருங்கிணைப்பு கூட்டம் பழனியில் அண்மையில் நடைபெற்றது.

கூட்டத்தின் போது, ஜனவரி 27ஆம் தேதி காலை 8 மணி முதல் 9.30 மணிவரை கும்பாபிஷேகம் நடைபெறும் என்றும், கும்பாபிஷேகத்தை காண மலைக்கோவிலுக்கு அனுமதிக்கப்படும பக்தர்கள் காலை 4 மணி முதல் 8 மணிக்குள் மலை கோவிலுக்கு சென்றுவிட வேண்டும் என்றும், ரோப் கார் மற்றும் வின்ச் ஆகியவற்றில் 2000 பேரும் படிவழிப்பாதை வழியாக 4 ஆயிரம் பேர் என மொத்தம் 6ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | Happy Pongal 2023: மூன்று விதமான ருசியான பொங்கல் ரெசிப்பி... வீட்டிலேயே செய்யலாம் வாங்க!

குலுக்கல் முறையில் தேர்வு

கும்பாபிஷேகத்தை காண விரும்பும் பக்தர்கள் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்றும், பதிவு செய்யும் பக்தர்களில் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு 3000 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோவில் குடமுழுக்கு விழாவில் பங்கேற்பதற்கு முன்பதிவு செய்யும் முறையை கோவில் நிர்வாகம் அறிவித்தது. அதாவது, குடமுழுவுக்கு விழாவில் கலந்து கொள்ள விரும்பும் பக்தர்கள், திருக்கோயில் இணையதளமான www.palanimurugan.hrce.tn.gov.in மற்றும் வலைதலமான www.hrce.tn.gov.in ஆகியவற்றின் மூலம்  ஜன. 20 வரை கட்டணமில்லா முன்பதிவு செய்து கொள்ளலாம் என திருக்கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

மேலும் முன்பதிவு செய்ய அரசால் வழங்கப்பட்ட சான்றிதழ்களில் ஏதேனும் ஒன்றை சமர்ப்பித்து தங்களது கைப்பேசி எண்ணுடன் (Mobile Number) மின்னஞ்சல் முகவரி இருப்பின் (E-Mail Id) விவரம் தந்து முன்பதிவு செய்து கொள்ளுமாறு அறிவித்துள்ளது.

மேலும் படிக்க | பாம்பின் விஷம் அதை ஒன்றும் செய்யாதா? சில சுவாரசிய தகவல்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News