கள்ளத்தொடர்பு வைத்திருந்த கணவன்; தட்டி கேட்ட மனைவிக்கு கொலை மிரட்டல்

சென்னை திருவொற்றியூரில் மனைவி மற்றும் பெற்ற குழந்தைகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த கணவனை போலீஸார் கைது செய்தனர்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jul 30, 2022, 01:26 PM IST
கள்ளத்தொடர்பு வைத்திருந்த கணவன்; தட்டி கேட்ட மனைவிக்கு கொலை மிரட்டல் title=

சென்னை திருவொற்றியூர் பெரியார் நகர் பகுதியில் வசிக்கும் மேரி வனஜா என்பவர் தனது கணவர் மற்றும் பிள்ளைகளோடு வசித்து வந்த நிலையில் மேரி டிட்டோரியல் சென்டர் ஒன்றை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் தனது கணவரான சேகர் என்பவர் வேறொரு பெண்ணோடு கள்ளத்தொடர்பு வைத்திருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து தட்டிக் கேட்டுள்ளார் அப்பொழுது சேகர் தனது மனைவி மேரி வனஜாவை கொலை செய்து விடுவதாக மிரட்டி உள்ளார் மேலும் தனது பிள்ளைகளையும் கொலை செய்து விடுவதாக மிரட்டி உள்ளார்.

மேலும் படிக்க | கடலில் மூழ்கிய மனைவியைத் தேடி அப்செட் ஆன போலீஸார்... கடைசியில் காத்திருந்த ட்விஸ்ட்!

கள்ளத்தொடர்பு வைத்திருந்த பெண் தனது டிட்டோரியல் சென்டரில் ஏற்கனவே மாணவியாக படித்து முடித்ததாகவும் அப்பொழுது ஏற்பட்ட பழக்கத்தின் காரணமாக தற்பொழுது கள்ளத்தொடர்பு பழக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் இதே போன்று தற்பொழுது படிக்கும் மாணவிகள் யாருக்கும் எந்த ஒரு பாதிப்பும் நேரிடக்கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவொற்றியூர் காவல் நிலையத்தில் கொலை மிரட்டல் விடுத்த தனது கணவர் மீது மேரி புகார் அளித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மனைவி மற்றும் பெற்ற குழந்தைகளை கொலை செய்து விடுவதாக கொலை மிரட்டல் விடுத்த கணவன் சேகர் என்பவரை திருவொற்றியூர் மகளிர் காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் படிக்க | Viral Video: சின்ன விசியத்துக்காக கட்டுன புருஷனை இப்படி அடிப்பது.. பாவம் 15 தையல்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News