அத்துமீறலில் திமுக பெண் கவுன்சிலர்களின் கணவர்கள்? திகைப்பில் திண்டிவனம்

திண்டிவனத்தில் திமுக பெண் கவுன்சிலர்களின் கணவர்கள் செய்யும் அத்துமீறல் குறித்து திமுக தலைமைக்கு புகார்கள் பறந்திருக்கின்றன. இது குறித்து கட்சி தலைவரான முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற அந்த புகாரில் வலியுறுத்தப்பட்டுள்ளது.   

Written by - S.Karthikeyan | Last Updated : Aug 11, 2023, 02:31 PM IST
  • திண்டிவனத்தில் திமுக கவுன்சிலர்கள் அத்துமீறல்
  • கணவர்களின் அத்துமீறலால் உடன்பிறப்புகள் அதிருப்தி
  • கட்சி தலைமைக்கு புகார் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
அத்துமீறலில் திமுக பெண் கவுன்சிலர்களின் கணவர்கள்? திகைப்பில் திண்டிவனம்  title=

முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு நாமக்கல்லில் நடந்த மாநாட்டில் கடும் எச்சரிக்கை விடுத்தார். மேலும் தி.மு.க.வின் மூத்த நிர்வாகி துரைமுருகனும் எச்சரிக்கை விடுத்திருக்கிறார். யார் எச்சரிக்கை கொடுத்தாலும், ஒரு சில கவுன்சிலர்கள் மற்றும் பெண் கவுன்சிலர்களின் கணவர்கள் சில அத்து மீறலில் ஈடுபடுவது வாடிக்கையாகிவிட்டது. இந்த நிலையில்தான் திண்டிவனத்தில் கவுன்சிலர்களின் கணவன் மார்கள் அத்து மீறலில் ஈடுபடுவதாக அறிவாலயத்திற்கு புகார் கடிதங்கள் சென்றிருக்கிறது. 

மேலும் படிக்க | மக்களுக்கு இன்ப அதிர்ச்சி: சரசரவென சரிந்தது தக்காளியின் விலை! ஒரு கிலோ இவ்வளவு கம்மியா?

இது பற்றி அங்குள்ள மூத்த உடன் பிறப்புக்கள் சிலரிடம் பேசினோம். ‘‘சார், ‘‘ திண்டிவனத்தில் பெண் கவுன்சிலர்களின் கணவன்மார்கள்  செய்யும் அட்ராசிட்டி நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இவர்கள் மீது பாரபட்சமின்றி முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உடன் பிறப்புக்கள் அறிவாலயத்திற்கு கோரிக்கை வைத்து வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகராட்சியில் மொத்த கவுன்சிலர்கள் 33. இதில் 26 பேர் தி.மு.க. கவுன்சிலர்கள். வி.சி.க.வைச் சேர்ந்தவர் ஒருவர். நான்கு பேர் அ.தி.மு.க.வினர். இரண்டு பேர் பா.ம.க.வைச் சேர்ந்தவர்கள் ஆவர். 

இதில் தி.மு.க.வின் கூட்டணிக் கட்சியான வி.சி.க.விற்கு துணைத் தலைவர் பதவியைக் கொடுத்துவிட்டனர். இந்த நிலையில்தான் துணைத் தவைர் பதவி தனக்கு கிடைக்கவில்லை என்று சீனு சின்னசாமி உள்ளிட்ட சில கவுன்சிலர்கள் நகராட்சி நிர்வாகத்தின் செயல்பாடுகளை முடக்கும் விதமாக செயல்படுகின்றனர். குறிப்பாக பெண் கவுன்சிலர்களின்  கணவர்கள் செய்யும் அராஜத்தை வெளியில் சொல்ல முடியாது. கவுன்சிலர் ரேகாவின் கணவர் நந்த குமார், புனிதாவின் கணவர் ராஜேந்திரன்,  அதிகாரிகளை மிரட்டி பல்வேறு அத்து மீறல்களில் ஈடுபட்டு வருவது தெரிந்து அவர்களை அலுவலகத்திற்குள் வரக்கூடாது என்று கலெக்டர் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

மேலும், நந்தகுமார் காண்டிராக்ட் எடுத்து செய்த பணகள் தரமாக இல்லை என்று கூறப்படுகிறது. மாவட்ட ஆட்சியர் இவருக்கு எந்த பணிகளும் கொடுக்கக்கூடாது என முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பெண் அதிகாரிகளை ராஜேந்திரன் தகாத வார்த்தைகளை சொல்லி மிரட்டியதால், அந்த பெண் அதிகாரி மாறுதல் வாங்கி வேறு ஊருக்கு சென்றுவிட்டார். இப்படி பாபு, சீனி சின்னசாமி, நந்தகுமார், ராஜேந்திரன் ஆகியோர் மீது உடன் பிறப்புக்கள் அறிவாலத்திற்கு அடுக்கடுக்கான புகார்களை அனுப்பியிருக்கின்றனர். இந்த புகார்கள் குறித்து முதல்வரின் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறது.

இதற்கு முன்பு பா.ம.க.வில் இருந்து தற்போது தி.மு.க.வில் இணைந்துள்ள நந்தகுமார்தான் ‘எல்லாவற்றிற்கும்’ காரணம் என கிசுகிசுக்கிறார்கள். திண்டிவனம் நகராட்சியை 50 வருடத்திற்கு பிறகு தி.மு.க. கைப்பற்றியிருக்கிறது.  இதற்கு முக்கியக் காரணம் வடக்கு மாவட்டத்தின் களப்பணிகள்தான் காரணம்! அ.தி.மு.க.வைக் சேர்ந்த மாஜி சி.வி.சண்முகம், பா.ம.க.தவைர் ராமதாஸ் ஆகியோர் கோலோச்சும் திண்டிவனத்தை தி.மு.க. கைப்பற்றியது பெரிய விஷயம். 

மேலும் படிக்க | உயர் கல்வி படிக்க செல்லும் தமிழக மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

ஆனால், பெண் கவுன்சிலர் கணவர்களின் அத்துமீறல்களால், பொதுமக்களுக்கு அரசின் திட்டப்பணிகள் சேராமல் தடை பட்டுவிடுமோ என உடன் பிறப்புக்கள் உள்ளுக்குள் குமுறி வருகின்றனர்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News