தமிழகத்தில் நிலவும் பிரச்சினைகள் மற்றும் தேவைகள் குறித்து பிரதமர் அவர்களிடம் எடுத்துக் கூறியதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
இன்று பிரதமரை நேரில் சந்தித்து அவரிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்திருப்பதாக ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
தமிழகத்தில் நிலவும் பிரச்சினைகள் மற்றும் தேவைகள் குறித்து பிரதமர் திரு @narendramodi அவர்களிடம் எடுத்துக் கூறினோம்.
— O Panneerselvam (@OfficeOfOPS) May 19, 2017
அந்த மனுவில் கூறப்பட்டதாவது:-
* விவசாயிகள் கடுமையான கடன் சுமையால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே விவசாயிகளின் வங்கிக் கடன்களை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும்.
* தமிழகத்தில் நிலவும் குடிநீர் பிரச்சினை குறித்தும் எடுத்து கூறினோம். மேலும் தமிழக அரசுக்கு கூடுதல் நிதி வழங்க வேண்டும்.
* காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தேவையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
* நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து அந்த கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நிலவும் குடிநீர் பிரச்சினை, காவிரி மேலாண்மை வாரியம், NEET தேர்வில் விலக்கு உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்தும் எடுத்து கூறினோம்.
— O Panneerselvam (@OfficeOfOPS) May 19, 2017
புரட்சித்தலைவி அம்மா அவர்களின் மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை தேவை என பிரதமரிடம் வலியுறுத்தினோம். எங்களின் கோரிக்கைகளை பரிசீலிப்பதாக பிரதமர் திரு நரேந்தர மோடி அவர்கள் உறுதியளித்துள்ளார் என ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
மேலும் மக்கள் நலனுக்காகவே பிரதமரை சந்தித்ததாகவும், அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை என்றும் அவர் கூறினார்.
எங்களின் கோரிக்கைகளை பரிசீலிப்பதாக பிரதமர் திரு @narendramodi அவர்கள் உறுதியளித்துள்ளார்.
— O Panneerselvam (@OfficeOfOPS) May 19, 2017